Tuesday, March 11, 2014

தேர்தலோ தேர்தல்!



 தேர்தலோ  தேர்தல்!

நல்லோரே நல்லோரே வாரு மிங்கே-தேர்தல்
நாடக ஒத்திகை பாரு மிங்கே
வல்லோரே வைப்பதே சட்ட மாக-ஆள
வந்தவர் போடுவார் கொட்ட மாக
பல்லோரே சேருவார் கூட்ட ணியாய்- கொள்கை
பறந்திட தேடுவார் ஓட்டி னியே
சொல்வாரே கூசாமல் நாக்கு மின்றே-பணி
செய்திட நிற்பதாம் நோக்க  மென்றே

தன்னலம் இல்லாதார் ஒன்று  கூடி-பெற்று
தந்தாராம் சுதந்திரம் போரு மாடி
என்நலம் காப்ப தாம் என்றேமனம்-நாளும்
எண்ணுவர் கைகளில் சென்றேதினம்
உன்நலம் அழிப்பாரே அவருமென -நீர்
உணராது இருப்பதும் தவறேயென
பொன்மனப் பெரியோரே உணர்ந் திடுவீர்-இந்த
போக்கினை நீக்கிட என்ன வழியே

யாராள வந்தாலும் ஊழல் மட்டும்-இங்கே
உருவாகா நிலைகாணும் சூழல் மட்டும்
வாராது ஒருநாளும் உண்மை யிதாம்-கடந்த
வராலாறு காட்டிடும் தன்மை யிதாம்
சீராகநாம்செய்யவேண்டுமுடன்-இதை
செய்வதே உண்மையில் நமதுகடன்
போராகஉள்நாட்டில்பரவஎங்கும்-பெரும்
புரட்சியாய் உருவாகும் நிலையேயெங்கும்

கூட்டணிபேரமேஇங்கேதினம்-பெரும்
கொடிகட்டிப்பறந்திட தங்களினம்
போட்டியில் கேட்கின்றார் சீட்டேபல-வாக்கு
போடவும் தருகின்றார் நோட்டேபல
கேட்டிட யாரிங்கே நாதி யில்லை-தட்டி
கேட்டவர் பெறுவதோபீதி யெல்லை
ஓட்டிட போகவே அஞ்சு கின்ற-நிலை
உள்ளதை எண்ணுவீர் கொஞ்ச மின்றே

வந்ததே லாபமாய் மக்கள் எண்ணும்-நிலை
வந்தவர் வாக்கினை வழங்கில் மண்ணும்
சொந்தமாய் பிடியின்றி போவா ரந்தோ-நல்
சுடுகாடும் இல்லாமல் ஆவா ரந்தோ
சிந்தனை செய்திட வேண்டு முடன்-என
செப்பியே மக்களை தூண்டு முடன்
வந்தனை கூறியே முடித்தே னதை-நெஞ்சில்
வடிந்ததை கவிதையாய் தொடுத்தே னதை

                                    புலவர் சா இராமாநுசம்

11 comments :

  1. இப்படிப்பட்ட சுயநலக்காரர்களுக்கு ஏன் வோட்டு போடவேண்டுமென்று பலரும் வோட்டு போட வருவதில்லை ,வருகிற தேர்தலில் நோட்டா வோட்டும் கூடுமென எதிர்ப்பார்க்கலாம் !
    த ம 1

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி!

      Delete
  2. தேருதல் வரும் போதே மக்கள் துணிவுடனும் விழிப்புடனும்
    செயற்பட வேண்டும்.தக்க தருணத்தில் இட்ட மிகச் சிறப்பான
    பகிர்வுக்குத் தலை வணங்குகின்றேன் ஐயா !

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி!

      Delete
  3. தேர்தலோ தேர்தல்!
    நன்றே களைகட்டிடுச்சு
    புலவர் பாக்கள்
    போட்டுடைக்குது
    உண்மை என்னவென்றே!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி!

      Delete
  4. நடக்கும் / நடந்த உண்மைகளை அப்படியே வரிகளில்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி!

      Delete
  5. கூட்டணிபேரமேஇங்கேதினம்-பெரும்
    கொடிகட்டிப்பறந்திட தங்களினம்
    போட்டியில் கேட்கின்றார் சீட்டேபல-வாக்கு
    போடவும் தருகின்றார் நோட்டேபல
    கேட்டிட யாரிங்கே நாதி யில்லை-தட்டி
    கேட்டவர் பெறுவதோபீதி யெல்லை....


    அருமை ஐயா... உள்ளதை உரைத்திடும் உன்னதக் கவிதை.

    ReplyDelete
  6. கூட்டணி பேரம்...... எங்கும் எதிலும் பேரம்....:(((((

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி!

      Delete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...