Tuesday, September 23, 2014

வலையில் பலபேர் எழுதவில்லை –அவரே வாராக் காரணம் தெரியவில்லை!



வலையில் பலபேர் எழுதவில்லை –அவரே
வாராக் காரணம் தெரியவில்லை-தாமரை,
இலையில் நீரென வருகின்றார்- பதிவும்
இருப்பதாய் ஒப்புக்கு தருகின்றார்- சிலர்
நிலையில் மாற்றம் நன்றல்ல-காலம்
நிலையில் ! அறிவோம்! இன்றல்ல-எனினும்,
வலையில் எழுதியே வளர்ந்தோமே –அதை
வளர்த்திடும் பணியில் தளர்ந்தோமே!


நன்றி மறப்பது நன்றல்ல-நமக்கே
நவின்றது வள்ளுவன் இன்றல்ல-முகநூல்
சென்றது அணுவும் தவறல்ல-கருத்தைச்
செப்பிட அதுவும் வேறல்ல-ஆனால்
நின்றது வலைவழி வருவதுமே-என
நினைத்திட, பதிவிதும் தருவதுமே!-கடன்
என்றதே என்னுள் மனசாட்சி-அதனால்
எழுதினேன்! எழுதுதல், மிகமாட்சி!

புலவர் சா இராமாநுசம்

15 comments :

  1. யாரைச் சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை. எனினும் கவிதையும், கருத்தும் நன்று.

    ReplyDelete
    Replies
    1. நான் யாரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை! பொதுவாக பல முன்னோடிகள் வலையில் எழுதுவது அரிதாகி விட்டதே என்ற ஆதங்கம் ! இதை அனைவரும் வேண்டுகோளாக எடுத்துக்
      கொள்ள வேண்டுகிறேன். தவறெனில், மன்னிக்க!

      Delete
  2. ஐயா வணக்கம். நேரமின்மை என்ற ஒரு காரணம் மட்டுமே வேறெந்த காரணமும் என்னிடத்தில் இல்லை. நீங்கள் உரிமையுடன் எனை கேட்கலாம்.

    ReplyDelete
  3. பலர் முகநூலில் எழுதுகின்றனர்! அதனால் வலைப்பூ கொஞ்சம் சுவாரஸ்யம் இழந்துவிட்டது உண்மைதான்! பிரபல பதிவர்கள் வலைப்பூவிலும் எழுதவேண்டும்! ஐயாவின் வேண்டுகோளை செவிமடுத்தால் நல்லதுதான்!

    ReplyDelete
  4. நடப்பு நிலவரம் சரியா இருக்கு
    தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்
    மிக்க நன்றி.

    ReplyDelete
  5. வயது முதிர்ந்த நிலையிலும் உங்களுக்கு உள்ள உ ற்சாகம்,மற்ற முன்னோடிகளுக்கும் வந்தால் நலமே !
    த ம 4

    ReplyDelete
  6. ஐயா நானும் சில நாட்களாக பதிவுகள் எழுதவில்லை, கண்டிப்பாக எழுதுகிறேன்...

    ReplyDelete
  7. ஐயா தொடர்ந்து எழுதுங்கள்...
    வலைப்பூக்கள் நிலை இப்போது நீங்கள் சொல்வது போல்தான் இருக்கிறது ஐயா...

    ReplyDelete
  8. நேரச்சிக்கல் தான் அடிப்படைக்காரணம் என்றாலும் சோம்பல் ஹிட்சு இல்லாத நிலையும் தான் எனலாம் ஐயா!

    ReplyDelete
  9. வலையில் எழுதுபவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டேதான் இருக்கிறது ஐயா
    இந்நிலை மாறவேண்டும்

    ReplyDelete

  10. வலையில் புதிதாய் எழுத வருவோருக்கு வழிவிட்டு மூத்த பதிவர்கள் விலகி இருக்கிறார்களோ என்னவோ? இருப்பினும் தங்களின் வேண்டுகோளை அவர்கள் செவிமடுப்பார்கள் என நம்புகிறேன்.

    ReplyDelete
  11. வரும் மதுரை சந்திப்பு விழாவில் இதைப் பற்றியும் விவாதிப்போம் ஐயா...

    ReplyDelete
  12. முகநூலில் அதிக நாட்டம் வந்து விட்டது பலருக்கு.....

    உங்கள் வேண்டுகோளை ஏற்று வலைப்பூவில் தொடர்ந்து எழுதுவார்கள் என நம்புவோம்.

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...