எட்டுப் பத்தொடு இரண்டாகும்-வயது,
இன்றென் பிறந்த நாளாகும்
பட்டுப் பட்டே பதப்பட்டேன்-துன்பப்
பட்டே நானும் சுகப்பட்டேன்
தொட்டுத் தாலி கட்டியவள்-நெஞ்சில்
துயரத் தீயை மூட்டுயவள்
விட்டுச் சென்றது ஒன்றேதான்-என்றும்
விலகா வேதனை இன்றேதான்
வையம் தன்னில் வாழ்வாங்கு-நான்
வாழ்ந்த வாழ்வு மனமோங்க
பொய்யும் புரட்டும் இல்லாமல்-பிறர்
புறத்தே எதுவும் சொல்லாமல்
ஐயன் வகுத்த வழியென்றே-முடிந்த
அளவில் நானும் பழியின்றே
செய்யும் பணிகளைச் செய்தேனே-நட்பே
சிறப்பென அன்பைப் பெய்தேனே
சிதலைத் தின்ற ஆல்போல-அடி
சிதைய அந்தோ! நாள்போல
மதலை விழுதே தாங்குமன்றே-பெற்ற
மகளீர் என்னையும் அதுபோன்றே
இதமாய் நாளும் தாங்கிடவே-வற்றா
இளமை மனதில் தேங்கிடவே
பதமாய் நடந்தே வாழ்கின்றேன்-கவிதை
படைப்பதே பணியெனச் சூழ்கின்றேன்
வலையில் கவிதைப் படிப்பவரே-எனை
வாழ்த்திக் கருத்தும் கொடுப்பவரே
அலையில் பட்ட துரும்பாக-ஓர்
ஆலையில் பட்டக் கரும்பாக
நிலையில் மனதும் நிலையாக-பெரும்
நிம்மதி! துயரம் அதுபோக
விலையில் பாசப் பந்தங்களே-உம்மால்
விளைந்தது! நன்றி! சொந்தங்களே
புலவர் சா இராமாநுசம்
மனம் கனிந்த இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் ஐயா
ReplyDeleteநன்றி!
Deleteதம 1
ReplyDeleteநன்றி!
Deleteஉங்கள் பிறந்தநாளில் நாங்கள் படிக்க ஒரு இனிய கவிதை. நன்றி.
ReplyDeleteவணக்கங்களுடன் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஸார்.
நன்றி!
Deleteஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
ReplyDeleteஇனிய பாக்களை என்றும் தர
நீடூழி வாழ வாழ்த்துகிறேன்!
நன்றி!
Delete
ReplyDeleteஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா! தாங்கள் பல்லாண்டு நலமோடும் வளமோடும் வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய வேண்டுகிறேன்.
நன்றி!
Deleteவணங்கி வாழ்த்துகிறேன்
ReplyDeleteநன்றி! வணக்கம்!
Deleteஇனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஐயா...
ReplyDeleteநன்றி! வணக்கம்!
Deleteமனம் நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள் புலவர் ஐயா.
ReplyDeleteநன்றி! வணக்கம்!
Deleteபிறந்த நாள் வாழ்த்துக்கள்.
ReplyDeleteவணக்கங்கள்.
நன்றி! வணக்கம்!
Delete//பட்டுப் பட்டே பதப்பட்டேன்-துன்பப்
ReplyDeleteபட்டே நானும் சுகப்பட்டேன்//
தங்கள் அனுபவங்கள் எங்களுக்க் அருமையான கவிதைகளாய் கிடைக்கின்றறன,
இன்னும் பல்லாண்டுகள் வாழ வாழ்த்துகிறோம் ஐயா
நன்றி! வணக்கம்!
Deleteஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா!
ReplyDeleteநன்றி! வணக்கம்!
Deleteமனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா...
ReplyDeleteநன்றி! வணக்கம்!
Deleteதங்கள் பிறந்த நாளில் ஆசி வேண்டுகிறேன் அய்யா
ReplyDeleteநன்றி! வணக்கம்!
Deleteஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ...!
ReplyDeleteநன்றி! வணக்கம்!
Deleteபிறந்த நாள் கவிதை அருமை அய்யா !
ReplyDeleteவாழ்த்த வயதில்லை ,வணங்கி மகிழ்கிறேன் !
த ம 7
நன்றி! வணக்கம்!
Deleteவணக்கம் !
ReplyDeleteவாழ்த்தும் வயது எனக்கில்லை ஆதலால் தங்களின் நல்லாசி வேண்டி
வணங்கி நிற்கின்றேன் ஐயா !இறைவன் தங்களை ஆசீர் வதிக்கட்டும் .
மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு .
நன்றி! வணக்கம்!
DeleteVanangukiren Ayya
ReplyDeleteநன்றி! வணக்கம்!
DeleteVanangukiren Ayya
ReplyDeleteநன்றி! வணக்கம்!
Deleteமனம் கனிந்த இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் ஐயா
ReplyDeleteநன்றி! வணக்கம்!
Deleteமனம் நிறைந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா!
ReplyDeleteநன்றி! வணக்கம்!
Deleteஎங்கள் மனம் நிரைந்த இனிய பிறந்த நாள் வாழ்த்டுக்கள் ஐயா!
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வணக்கங்கள் ஐயா!
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteஅய்யாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். என் அருமை தாத்தாவின் வயது:) நல்ல உடல்நலமும், மனநலமும் தீர்க்கமாய் சிந்தனையும் நாள் தோறும் மேலும் மேலும் பொழியட்டும் உங்கள் வாழ்வில். ஏனோ மனதில் இன்னதென தெரியாத உற்சாகம். மனம் நிறைந்திருக்கிறது:)))
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteகொஞ்சம் தாமதம் ஆனாலும், பிறந்தநாளுக்கு ஏதேனும் பரிசு தர ஆசை எனவே தம பத்து:))
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteமனம்கனிந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் பெருந்தகையே...
ReplyDeleteநலமுடன் வாழ்ந்திட எமையாளும் ஈசனிடம் என் பிரார்த்தனைகள்...
மிக்க நன்றி!
Deleteஇனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஐயா.வேங்கடவன் நிறைந்த உடல் நலத்தையும்,மன அமைதியையும் அளிக்கட்டும்.
ReplyDeleteதாமதத்திற்கு மன்னிக்கவும்.
மிக்க நன்றி!
Deleteஐயா வணக்கம். தாமத வருகைக்கு மன்னிக்க வேண்டும்.
ReplyDeleteதங்களின் பிறந்தநாள் தாமதமாகவே அறிகிறேன்.
எண்பத்திரண்டாம் பிறந்தநாள்! அடே அப்பா! எவ்வளவு அனுபவங்கள் இருக்கும்! அவ்வளவையும் எங்களுக்குக் கற்றுத் தாருங்கள் அய்யா. வணக்கம் கலந்த வாழ்த்துகள் அய்யா.
இன்னும் பல்லாண்டுகள் உடல்நலத்தோடும், இதே சுறுசுறுப்பொடும் தாங்கள் தாங்கள் வாழ வேண்டும் என்று உளமார வாழ்த்துகிறேன்.