Saturday, May 16, 2015

வேண்டுவோம் இயற்கைத் தாயிடமே வேதனை செய்வதா சேயிடமே!


பட்டக் காலிலே படுமென்பார்
கெட்டக் குடியே கெடுமென்பார்
பழமொழி சொன்னார் அந்நாளே
பார்த்தோம் சான்றாய் நேபாளே
மீண்டும் மீண்டும் வருகிறது
மிரட்டும் அதிர்வுகள பலஊரில்
வேண்டுவோம் இயற்கைத் தாயிடமே
வேதனை செய்வதா சேயிடமே


பட்டது போதும் அவர்துயரம்
பறந்திட அங்கே பலஉயிரும்
கெட்டது போதும் இனிமேலும்
கெடுவது வேண்டா வருநாளும்
விட்டிடு பூமித் தாயேநீ
விழுங்க திறவாய் வாயேநீ
தொட்டது அன்னவர் துலங்கட்டும்
தொழில்வளம் முன்போல் விளங்கட்டும்

உழைத்தவர் நலம்பெற வேண்டாமா
உண்மை! அறிவாய் ஈண்டாமே
தழைக்க வேண்டும் அவர்வாழ்வே
தடுத்தால் உனக்கும் அதுதாழ்வே
பிழைக்க அன்னவர் வழிகாட்டி
பூமித்தாயே கருணை விழிகாட்டி
செழிக்கச் செய்வது உன்செயலில்
செழிப்பதும் அழிப்பதும் உன்கையில்

புலவர் சா இராமாநுசம்

17 comments :

  1. அருமை ஐயா அனைத்தும் நல்ல பொருள் பதிந்த அர்த்தங்கள்.
    தமிழ் மணம் 1

    ReplyDelete
  2. செழிப்பதும் அழிப்பதும் உன்கையில்... உண்மை தான்.

    ReplyDelete
  3. பூமித்தாயே கருணை விழிகாட்டி
    செழிக்கச் செய்வது உன்செயலில்
    செழிப்பதும் அழிப்பதும் உன்கையில்

    ReplyDelete
  4. இயற்கைதாயிடம் வேண்டுவோம்...ஆம் ஐயா செழிப்பதும் அழிப்பதும் உன்கையில்... உண்மைதான் ஐயா....அவர்கள் நல்வாழ்வு நலமாய் தொடங்கட்டும்.

    தம +1

    ReplyDelete
  5. நல்ல அர்த்தமுள்ள அருமையான கவிதை.

    ReplyDelete
  6. மனிதனும் முன்னெச்சரிக்கையுடன் இருந்தால் செடாரத்தைத் தவிர்க்கலாம் !

    ReplyDelete

  7. "பார்த்தோம் சான்றாய் நேபாளே
    மீண்டும் மீண்டும் வருகிறது
    மிரட்டும் அதிர்வுகள பலஊரில்
    வேண்டுவோம் இயற்கைத் தாயிடமே
    வேதனை செய்வதா சேயிடமே" என்று
    இயற்கைத் தாயிடமே வேண்டுவோம் - உன்
    சேய்களாம் நம்மவர் துயர்போக்கும் என்றே!

    ReplyDelete
  8. அருமை... அனைத்தும் நம் கையில் தான் ஐயா...

    ReplyDelete
  9. கவிதைக்கான தலைப்பு மிகவும் அருமையாக இருந்தது. தாயிடமே வேண்டுகோள் வைக்கும் சேயின் மன நிலையை வெளிப்படுத்திய பாங்கு நன்று.

    ReplyDelete
  10. பூமித் தாயோ பொறுத்திருந்தாள்
    பாவிகள் செய்யும் பலசேட்டை
    பொறுமை நாயகி பொங்கிவிட்டாள்
    மாறுதல் வேண்டும் மனங்களிலே!

    த ம 10
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...