Monday, May 18, 2015

முள்ளி வாய்க்கால் நினைவுதினம்!


முள்ளி வாய்க்கால் நினைவுதினம்-உலகம்
முழுவதும் வாழும் தமிழர்இனம்!
உள்ளி உள்ளுள் அழுவாராம் –இறந்த
உறவுகள் தம்மைத் தொழுவாராம்!
கொள்ளி வைக்கவும் ஆளின்றே –அவர்
குடும்பமே அழிந்த நாளின்றே!
சொல்லி ஆற்றாத் துயரன்றோ- போனது
சொல்லிட இயலா உயிரன்றோ!


தேதி இன்று பதினெட்டே –இந்த,
தேதியில் அந்தோ !மதிகெட்டே!
நீதியில் படுகொலை நடந்ததுவே –என்றும்
நீங்காத் துயரொடு கடந்தனவே!
வீதியில் பிணங்கள் சிதறிடவும்-ஈழம்
வேதனைப் பொங்கக் கதறிடவும்!
பீதியில் இன்றுமே! வாழ்கின்றார் –பலமுறைப்
பேசியும் பயனிலை என்கின்றார்!

புலவர் சா இராமாநுசம்

13 comments :

  1. வேதனை தீரும் நாள் விரைவில் வர வேண்டுகிறேன் ஐயா...

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகைக்கு மிக்க நன்றி!

      Delete
  2. நல்ல காலங்கள் பிறக்கவேண்டும்....தம +1

    ReplyDelete
  3. வேதனைகள் தீரும் ஒரு நாள் வரமாலா போயவிடும்......

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி!

      Delete
  4. வேதனை நிறைந்த வரிகள் ஐயா இறந்தோரை இன்றாவது நினைவு கூர்வோம்
    தமிழ் மணம் 3

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி!

      Delete
  5. அந்நாளை நினைவுகூர்ந்து பகிர்ந்தமைக்கு நன்றி. நன்னாளை எதிர்பார்ப்போம்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி!

      Delete
  6. அந்த கொடியோர்களுக்கு கொள்ளிவைக்கும் நாள் இன்னும் வரவில்லையே என்பதே என் வருத்தம் !

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி!

      Delete
  7. "தேதி இன்று பதினெட்டே –இந்த,
    தேதியில் அந்தோ !மதிகெட்டே!
    நீதியில் படுகொலை நடந்ததுவே –என்றும்
    நீங்காத் துயரொடு கடந்தனவே!" என
    நினைவூட்டினீர்கள் - நானும்
    அங்கே, அப்போது
    பல முறை செத்து உயிர்த்தேன்...
    ஐ.நா. முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை
    அங்கீகரிக்க வேண்டுகிறேன்!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி!

      Delete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...