Showing posts with label முள்ளி வாய்க்கால் நினைவுதினம் அஞ்சலி கவிதை புனைவு. Show all posts
Showing posts with label முள்ளி வாய்க்கால் நினைவுதினம் அஞ்சலி கவிதை புனைவு. Show all posts

Monday, May 18, 2015

முள்ளி வாய்க்கால் நினைவுதினம்!


முள்ளி வாய்க்கால் நினைவுதினம்-உலகம்
முழுவதும் வாழும் தமிழர்இனம்!
உள்ளி உள்ளுள் அழுவாராம் –இறந்த
உறவுகள் தம்மைத் தொழுவாராம்!
கொள்ளி வைக்கவும் ஆளின்றே –அவர்
குடும்பமே அழிந்த நாளின்றே!
சொல்லி ஆற்றாத் துயரன்றோ- போனது
சொல்லிட இயலா உயிரன்றோ!


தேதி இன்று பதினெட்டே –இந்த,
தேதியில் அந்தோ !மதிகெட்டே!
நீதியில் படுகொலை நடந்ததுவே –என்றும்
நீங்காத் துயரொடு கடந்தனவே!
வீதியில் பிணங்கள் சிதறிடவும்-ஈழம்
வேதனைப் பொங்கக் கதறிடவும்!
பீதியில் இன்றுமே! வாழ்கின்றார் –பலமுறைப்
பேசியும் பயனிலை என்கின்றார்!

புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...