Monday, May 25, 2015

தினம்போல இயற்கைதனை அழித்தோமே அன்றோ-செய்த தீவினையால் இந்நிலையைப் பொற்றோமே இன்றோ!



அனல்காற்று நாள்தோறும் தாங்காத வெய்யில்-
ஐயகோ வழிவதும் தண்ணீரோ மெய்யில்!
புனல்கூட சுடுகிறது தொட்டாலே எங்கும்-அதனால்
புல்பூண்டும் கரிகிவிட வெம்மையது பொங்கும்!
மனம்நோக மாவினமும் பசியாலே வாடும்- வான்
மழையின்றி உயிர்வாழ்தல் எவ்வண்ணம் கூடும்!
தினம்போல இயற்கைதனை அழித்தோமே அன்றோ-செய்த
தீவினையால் இந்நிலையைப் பொற்றோமே இன்றோ!


பருவங்கள் பொய்யாகி மழைமாறிப் போகும்-மேலும்
பாழாக விளைநிலமும் பயிரின்றி ஆகும்!
கருமேகம் வந்தாலும் பலனின்றி செல்ல-கண்டே
கண்ணீரில் விவசாயி குடும்பமே தள்ள!
உருவாகும் புயலாலே அழிவேதான் மிஞ்சும்-என்றே
உலகெங்கும் நாள்தோறும் வரும்செய்தி! துஞ்சும்,!
ஒருவாறு நாமறிய அறிவிப்பே! காண்பீர்! –உடன்
உணர்தினி இயற்கையைக் காத்திடப் பூண்பீர்!

சொய்வோமா!!!?

புலவர் சா இராமாநுசம்

13 comments :

  1. கேட்பார் நாதியில்லையென்றால்.இந்த வுலகத்தையும் அழிப்பாரே...

    ReplyDelete
  2. இயற்கையை நாம் வஞ்சித்தோம். இப்போது இயற்கை நம்மை வஞ்சிக்க தொடங்கியுள்ளது, என்பதை விளக்கும் கவிதை.
    த ம 3

    ReplyDelete
  3. வணக்கம்

    சமுக விழிப்புணர்வு கவிதை.. எல்லாம் தொழில் சாலைகளின் வளர்ச்சி...
    பகிர்வுக்கு நன்றி த.ம 3

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. இயற்க்கைகு செய்த துரோகத்தின் தண்டணையை நான் ஏற்றே தீரவேண்டுமே ஐயா.
    தமிழ் மணம் நான்காவது காலையில்

    ReplyDelete
  5. இயற்கையை அழித்துக் கொண்டே வருவதன் பலன் ஐயா
    இருந்தும் நாம் இன்னும் பாடம் கற்க மறுத்து வருகிறோம்
    தம +1

    ReplyDelete
  6. ஒவ்வொன்றும் உண்மை தான் ஐயா...

    ReplyDelete
  7. தங்களின் தமிழைத் தொடர்கிறேன்.

    ஆர்வத்துடன்.

    நன்றி.

    ReplyDelete
  8. வஞ்சனைத் தொடந்தால் தாகத்துக்கு தண்ணீரும் கிடைக்காத நிலை ஏற்படும் ,உணர்வது எப்போது ?

    ReplyDelete
  9. இயற்கையை அழிக்க நினைத்து நாமே அழிந்து போகிறோம்.....

    இப்போதாவது மனிதர்களுக்குப் புரிந்தால் நல்லது.

    ReplyDelete
  10. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்?!

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...