Thursday, December 31, 2015

ஆங்கிலப் புத்தாண்டே வருக ! –வாழும் அனைவர்க்கும் ஆனந்தம் தருக



ஆங்கிலப் புத்தாண்டே வருக ! –வாழும்
அனைவர்க்கும் ஆனந்தம் தருக
ஏங்கியே ஏழைகள் வாழ – குடிசை
இல்லாமல் வளமனைச் சூழ
தாங்கிட அன்னாரை நீயும் –இன்பம்
தடையின்றிப் நிலையாக பாயும்
தீங்கின்றி கழியட்டும் ஆண்டே –மக்கள்
தேவைகள் நிறைவேற ஈண்டே


இயற்கையின் சீற்றங்கள் கண்டே –எங்கள்
இதயமும் உடைந்ததிவ் வாண்டே
செயற்கையால் வந்ததே அறிவோம் – இனி
செய்வதை ஆய்ந்துமே செய்வோம்
இயற்கையின் கோபத்தை நீக்க –எம்மின்
இன்னல்கள் இல்லாது போக்க
முயற்சியும் செய்வாய ஆண்டே – மக்கள்
முன்னேற தடையின்றி ஈண்டே

உழவனும் அழுகின்றான் இங்கே – அவன்
உழைத்தாலும் பலன்போதல் எங்கே
தழைத்ததா அவன்வாழ்வு இல்லை – தினம்
தவித்தவன் பெறுவதோ தொல்லை
பிழைத்திட பருவத்தில் மாரி – நீயும்
பெய்திடச் தருவாயா வாரி
செழித்திட உலகமே ஆண்டே –உடன்
செய்திட வேண்டினோம் ஈண்டே

இல்லாமை நீங்கிட வேண்டும் – ஏழை
இல்லாத நிலையென்றும் வேண்டும்
கல்லாதார் இல்லாமை வேண்டும் – கல்வி
கற்றாரை மதித்திட வேண்டும்
கொல்லமை விரதமாய் வேண்டும் –நற்
குணங்களும் வளர்ந்திட வேண்டும்
எல்லாரும் வாழ்ந்திட ஆண்டே –நீயும்
ஏற்றது செய்வாயா ஈண்டே!

புலவர் சா இராமாநுசம்

42 comments :

  1. இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் ஐயா....
    தம +1

    ReplyDelete
    Replies
    1. புத்தாண்டு நல்வாழ்த்துகள் !நன்றி !

      Delete
  2. அருமையான கவிதை ஐயா தங்களுக்கு எனது 2016 புத்தாண்டு வாழ்த்துகள் ஐயா
    தமிழ் மணம் 2

    ReplyDelete
    Replies
    1. புத்தாண்டு நல்வாழ்த்துகள் !நன்றி !

      Delete
  3. அழகான அருமையான கவிதை. இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள் ஐயா!

    ReplyDelete
    Replies
    1. புத்தாண்டு நல்வாழ்த்துகள் !நன்றி !

      Delete
  4. ஆங்கிலப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். புத்தாண்டில் நலம் பல விளையட்டும்

    ReplyDelete
    Replies
    1. புத்தாண்டு நல்வாழ்த்துகள் !நன்றி !

      Delete
  5. பிழைக்கு வருந்துகிறேன்! தங்களுக்கு என் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் ஐயா!

    ReplyDelete
  6. அருமையான கவிதை! பகிர்விற்கு நன்றி ஐயா!

    ReplyDelete
    Replies
    1. புத்தாண்டு நல்வாழ்த்துகள் !நன்றி !

      Delete
  7. வணக்கம்
    ஐயா
    இனிய ஆங்கிலபுத்தாண்டு வாழ்த்துக்கள் கவிதை மிக அருமை ஐயா.த.ம 5
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. புத்தாண்டு நல்வாழ்த்துகள் !நன்றி !

      Delete
  8. வணக்கம் ஐயா !

    அருமையான வாழ்த்து !

    வளர்பிறை வண்ணம் போலே
    வாழ்மனை சிறக்க மக்கள்
    இளமையின் பூரிப் பாக
    எழிலுற நெஞ்சம் எல்லாம்
    அளவிலாச் செல்வம் சேர்த்தும்
    அறிவுடன் அன்பைச் கோர்த்தும்
    வளமுடன் வாழ்க வென்று
    வாஞ்சையாய் வாழ்த்து கின்றேன் !

    தங்களுக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன் !

    ReplyDelete
    Replies
    1. புத்தாண்டு நல்வாழ்த்துகள் !நன்றி !

      Delete
  9. அன்புள்ள அய்யா
    வணக்கம்.

    "இனிய ஆங்கில புத்தாண்டு - 2016"
    நல்வாழ்த்துகள்
    TM +

    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. புத்தாண்டு நல்வாழ்த்துகள் !நன்றி !

      Delete
  10. புத்தாண்டு வாழ்த்துக்கள். வளம் பெருகட்டும் அய்யா.

    ReplyDelete
    Replies
    1. புத்தாண்டு நல்வாழ்த்துகள் !நன்றி !

      Delete
  11. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    subbu thatha

    ReplyDelete
    Replies
    1. புத்தாண்டு நல்வாழ்த்துகள் !நன்றி !

      Delete
  12. புத்தாண்டு செய்யும். நம்புவோம். மகாமகம் காணும் 2016இல் ஐந்தாமாண்டு நிறைவு பெறும் எனது முதல் வலைப்பூவைக் காண அழைக்கிறேன். http://ponnibuddha.blogspot.com/2016/01/blog-post.html

    ReplyDelete
    Replies
    1. புத்தாண்டு நல்வாழ்த்துகள் !நன்றி !

      Delete
  13. புலவர் அய்யாவுக்கு நன்றி ! எனது உளங்கனிந்த புத்தாண்டு – 2016 நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. புத்தாண்டு நல்வாழ்த்துகள் !நன்றி !

      Delete
  14. அன்புள்ள பெரும்புலவர் அய்யா,

    இன்னல் போக்கி இனிய புத்தாண்டை வரவேற்கும் அருமையான கவிதை.

    புத்தாண்டு வாழ்த்துகள்!

    த.ம.8

    ReplyDelete
    Replies
    1. புத்தாண்டு நல்வாழ்த்துகள் !நன்றி !

      Delete
  15. இனிய புத்தாண்டு வாழ்த்துகள் ஐயா!

    தீங்கின்றி மாரியும் பெய்ய- எங்கள்
    தென்னகம் பாரினில் உய்ய
    பாங்குடன் பாடல் செய்தீர்- உங்கள்
    பாவினை ஆசியால் நெய்தீர்
    ஓங்கிடு மரபினில் செய்யுள் -இங்கே
    உம்போல் உரைப்பவர் உண்டோ?
    ஆங்கிலப் புதியதோர் ஆண்டில்- இன்னும்
    ஆயிரம் கவிதைகள் தாரீர்!

    ReplyDelete
    Replies
    1. புத்தாண்டு நல்வாழ்த்துகள் !நன்றி !

      Delete
  16. இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
    இனிய 2016 இல் எல்லாம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. புத்தாண்டு நல்வாழ்த்துகள் !நன்றி !

      Delete
  17. கவிதை அருமை ஐயா....

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. புத்தாண்டு நல்வாழ்த்துகள் !நன்றி !

      Delete
  18. புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா

    ReplyDelete
    Replies
    1. புத்தாண்டு நல்வாழ்த்துகள் !நன்றி !

      Delete
  19. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அய்யா!

    ReplyDelete
    Replies
    1. புத்தாண்டு நல்வாழ்த்துகள் !நன்றி !

      Delete
  20. வணக்கம் ஐயா!

    அருமையான கவிதை!
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  21. பிறந்திருக்கும் புத்தாண்டிலாவது நம் மொய் கணக்கு சரியாகட்டும் ,என் தளத்தில் உங்களால் வாக்களிக்க இயலவில்லை உங்கள் தளத்தில் வாக்களித்து முடிப்பதற்குள் என் மண்டைக் காயுதே :)

    ReplyDelete
  22. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அய்யா.

    ReplyDelete
  23. அருமையான கவிதை. அனிவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா ...!

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...