Monday, March 28, 2016

முகநூல் பதிவுகள்




ஊழலை ஒழிக்க முடியுமா !? முடியும் என்று எனக்குத் தோன்ற வில்லை! கிணற்று நீரில் நஞ்சு கலந்து விட்டால் அதில் உள்ள நீரை அகற்றி விட்டால் போதும்! ஆனால் கிணற்றில் சுரக்கும் நீரே நஞ்சானால் என்ன செய்வது !? அதுபோலத்தான் இன்றைய நம் சமுதாயமும் அரசியல் கட்சிகளும், அதிகாரிகளும் ஆனதோடு மக்களின் மனநிலையும் ,சுய நலத்தால் பிறர் செய்தால் ஊழல் அது தான் செய்தால் அல்ல என்று நினைக்கின்ற போக்காக மாறிவிட்ட தென்றால்!!! ஊழலை ஒழிக்க முடியுமா???? பதிலை நீங்கள் தான் சொல்ல வேண்டும்!


நெருஞ்சி முள் படர்ந்த தரையில் காலை வைந்தால் பாதம் முழுதும் முள் குத்ததானே செய்யும் !காலை மாற்றி மாற்றி , அங்கேயே வைத்தாலும் மீண்டும் அதே நிலைதானே!அதிலிருந்து விடுபட அவ்விடம் விட்டு வெளியே வருவது தானே புத்திசாலித் தனம்! அதுபோல நாம் வாழ்கையிலும் சில நிகழ்வுகள் வரும் ! அதுபோது அச் சூழ்நிலையில் இருந்து விலகி வருவதுதான், நமக்கு, நன்மை தரும்


உறவுகளே! வணக்கம்!
சொற்களைக் குறைவாக சொல்லி பொருளை விளங்க வைத்தலே செய்யுளுக்கு அழகு !அதுவாக இருக்க ஔவையார் ஏன் அறம்செய் ,என்று சொல்லாமல்,அறம் செய விரும்பு என்று சொல்ல வேண்டும் என்ற ஐயம் எழலாம் ! அறம் செய் என்பது ஏதோ கட்டளை இடுவது போல இருக்கும்! மேலும் ஏதோ சொன்னார்களே என்பதற்காக கட்டுப்பட்டு செய்வதாக அமையும் !தொடருமா என்பது ஐயமே! ஆனால் , அறம் செய அவனே விரும்புவதாக ஆகி விட்டால் அப் பணி தொடருமல்லவா! இதனை உணர்ந்தே அவ்வாறு மனோ தத்துவ அடிப்படையில் அன்படிக் கூறினார்


செய்தி!!!? ஒரு.....
மாணவன் பொதுத் தேர்வு எழுதிய முடித்த பின், வினாத்தாளைக் கொடுத்துவிட்டு ,விடைத்தாளை வீட்டுக்குக் கொண்டு போய் விட்டதாகவும் பிறகு விடைதாளை சரிபார்க்கும் போது, அடையாளம் கண்டு பிடித்து மாணவன் இல்லத்துக்கே சென்று வாங்கி வந்த தாகவும் வந்துள்ளது!! இது எவ்வளவு பெரிய அவக்கேடு!?
யாரை நோவது ? இன்றைய கல்வியின் தரத்தையா! மாணவன்
தரத்தையா ,மேற்பார்வை பார்த்தவரின் கவனக்குறையை யா? வெட்கப்படுகிறேன்! நானும் ஆசிரியனாக பணியாற்றிய காரணத்தால்

புலவர்  சா  இராமாநுசம்





10 comments :

  1. கதம்பமாக நான்கு விடயங்கள் அலசல் அருமை ஐயா
    தமிழ் மணம் 1

    ReplyDelete
  2. செய்தித் தொகுப்பு போலக் கொடுத்துள்ளீர்கள். ஊழலுக்குக் காரணம் அரசியவாதிகளை விட அரசு அதிகாரிகள்தான் முக்கியக் காரணம். எனவே ஊழலை ஒழிப்பது என்பது மிகவும் கடினம்.

    ReplyDelete
  3. அரபு நாட்டு தண்டனை முறை வந்தால் லஞ்சத்தை ஒழித்து விடலாம் :)

    ReplyDelete
  4. விடைத்தாளை வீட்டிற்கு எடுத்துச் செல்ல அனுமதித்தது வேதனை ஐயா

    ReplyDelete
  5. சுருக்கமாக எனினும்
    சுருக்கென மனதைக் கீறிச் செல்லும்
    விசயங்கள்
    வித்தியாசமாக சொல்லிப் போனவிதம் அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. வணக்கம்
    ஐயா

    மாணவன் பற்றி சொல்லிய செய்தி திகைப்பாக இருந்தது. பகிர்வுக்கு நன்றி த.ம 6
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  7. மாணவன் செய்தி
    வேதனையானது....

    ReplyDelete
  8. கருத்துகளின் தொகுப்பு அருமை.தேர்வு எழுதிய மாணவன் பற்றிய செய்தி கவலை கொள்ளவைத்தது உண்மை

    ReplyDelete
  9. அருமையான தொகுப்பு அய்யா!
    ஊழல் பற்றிய கருத்தும் விடைத்தாளை வீட்டுக்கு கொண்டு சென்ற மாணவன் பற்றிய செய்தியும் மிகுந்த கவலையை தருகிறது. நாம் எங்கு சென்று கொண்டிருக்கிறோம்?
    த ம 9

    ReplyDelete
  10. ஊழல் செய்வது தப்பா? என்ற நிலை இன்றுள்ளது!

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...