Friday, June 24, 2016

முகநூல் பதிவுகள் !

தென்னை மரத்தில் ஒருத்தன் ஏறி தேங்காய் பறிக்க முயல காவல்காரன் ஓடி வருவதைக் கண்டு அவசரமாக  இறங்கினான், காவல்காரன் கேட்டான் ! ஏண்டா மரத்திலே ஏறின ! திருடன் பதில் சொன்னான்! புல் பிடுங்க! என்றான் காவல்காரன், ஏண்டா தென்னை மரத்திலா புல்லிருக்கும் என்று கேட்க , இல்லை! அதான் இறங்கி வரேன்னு, திருடன் பதில் சொன்னான்! இது, எப்படி இருக்கு! இப்போ நாட்டு நடப்பைப் பார்த்தேன்! எழுதினேன்!


ஒரு குடும்பத்தலைவி , தங்கள் வருவாய்க்கு ஏற்றவாறு செலவு செய்தும் இல்லத்திற்கு வரும் உறவினர்களை( தன் வழியும் கணவன் வழியும்) வரவேற்று வேறுபாடு காட்டாமல் விருத்தோம்பியும் கணவனோடு பெற்ற மக்களையும் பேணி பாதுகாத்து தினமும் இறைவனைத் தொழுபவளாக் இருக்க வேண்டும்

கடித்தது நாயா இருந்தால் கையில் கிடைத்ததை கொண்டு விரட்டி அடிக்கலாம்! கடித்தது செருப்பா இருந்தா ? என்ன செய்வது! இப்படித் தான் , நம் வாழ்கையிலும் பல செயல்கள் நடக்கின்றன! அவற்றுள் நாம் ஒரு சில வற்றுக்கு மட்டுமே எதிர் வினை செய்ய முடியும்! சிலவற்றுக் பொறுத்து அமைதி காக்கத் தான் வேண்டும்!

அறிஞர் அண்ணா அவர்கள் மாநில சபையில் பேசும்போது . மாண்பு மிகு பாரதப் பிரதமர் நேரு அவர்களிடம் , நீங்கள் கட்டி முடிக்கப்பட்ட கோபுரம் போன்றவர், நானோ கெட்டிக் கிடக்கின்ற செங்கல்லைப் போன்றவன் , என்று, தன்னடக்கத்தோடு குறிப்பிட்டார்! இன்று அவர் பெயரைக் கொண்டும் ,கொள்கைவழி நின்றும் நடப்பதாகச் சொல்லும் ஆளும் கட்சியும் ,எதிர் கட்சியும் .குறைந்த அளவேனும் அவர் காட்டிய கண்ணியத்தை அவையில் கடை பிடித்து நடக்க, ஓட்டளித்த மக்கள் எதிர் பார்க்கிறார்கள்!!!?

கச்சத் தீவு பிரச்சனையில் இரு கட்சிகளும் வீண் விதண்டா வாதம் செய்து சட்டமன்ற நேரத்தைப் பாழாக்குவதில் எவ்வித பயனும் இல்லை !இனி , அதனைத் திரும்ப , பெறும் வாய்ப்பு மிகவும் குறைவே! உடன் ஆற்ற வேண்டிய பணி, மீனவரின் வாழ்வாதாரம் வளம்காண உரிய வழிதனை , என்ன வென ஆய்வதே உங்கள் இருவரின் செயலாக வேண்டும்! செய்வீர்களா!?

புலவர்  சா  இராமாநுசம்
 

7 comments :

 1. சரியான ஆலோசனை கேட்பார்களா நம் மக்கள் ?

  ReplyDelete
 2. இது போன்ற வெட்டி விவாதங்களைத் தவிர்ப்பது நல்லதே!

  ReplyDelete
 3. நல்ல பகிர்வு.

  சட்டசபை மட்டுமல்ல நாடாளுமன்றத்திலும் வெட்டி விவாதங்கள் தான் கொட்டிக் கிடக்கின்றன.

  ReplyDelete
 4. ஐயா,

  நீங்கள் கட்டி முடிக்கப்பட்ட கோபுரம் போன்றவர், நானோ கொட்டி கிடக்கின்ற செங்கல்லைப் போன்றவன்,.அரசியலாருக்கு தங்களின் அறிவுரை அருமை, செவிகளை எட்டுமா?

  கோ

  ReplyDelete
 5. அழகாக சொன்னீர்கள் ஐயா இவர்கள் காலம் முழுவதும் நம்மை ஏமாற்றிக்கொண்டே இருப்பார்கள் தெரிந்துதானே மக்கள் வாக்களித்தார்கள் என்ன செய்வது....
  த.ம. 3

  ReplyDelete
 6. இவர்களின் சண்டையில் பாதிக்கப் படுவது மீனவன்தான் :)

  ReplyDelete
 7. அருமையான பதிவு

  கருத்து மோதலில் பங்கெடுக்க வாரும்!
  http://www.ypvnpubs.com/2016/06/blog-post_27.html

  ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...