Monday, May 15, 2017

ஆளும் அரசு இருக்கிறதா-இங்கே ஆட்சி ஒன்று நடக்கிறதா?




ஆளும் அரசு இருக்கிறதா-இங்கே
ஆட்சி ஒன்று நடக்கிறதா
நாளும் மக்கள் படும்தொல்லை-காணில்
நவின்றிட இயலா! எதுஎல்லை
மூளும் மக்கள் போராட்டம்- உடைந்து
முடங்கிட அரசின் தேரோட்டம்
வாளும் பேடிகை ஆயிற்றே-மக்கள்
வாழ்வே வீணாய் போயிற்றே


புலவர் சா இராமாநுசம்

19 comments :

  1. ஐயா இங்கு யாருக்கும் வெட்கமில்லை.

    ReplyDelete
  2. தங்களின் ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்வது ஒன்றேதான் அவர்கள் அஜண்டா,மக்களை எங்கே நினைத்துப் பார்க்க போகிறார்கள் ?

    ReplyDelete
  3. கில்லர் சொன்னதை வழிமொழிகிறேன் ...

    ReplyDelete
  4. பேசாம எல்லாரும் வேற நாட்டுக்கு போய்டலாம் வாங்க

    ReplyDelete
  5. தமிழன் என்று சொல்லடா
    தலை குனிந்து நில்லடா
    எனும் நிலைக்கு தமிழகம்
    நிர்வாகத்தில் சீர்குலைந்து கொண்டுதான் உள்ளது

    ஆதங்கத்தை பதிவு செய்த விதம் அருமை

    வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete
  6. வேதனை மட்டுமே மிச்சம்....

    ReplyDelete
  7. ஆட்சியின் தாக்கம் அதிகமாவதால்தானோ இப்படி எண்ணம் வருகிறது

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...