Thursday, October 5, 2017

கோடி தரினும் மயங்காதே-ஏற்ற கொள்கையைக் காக்க தயங்காதே!



ஓடி உதைத்து விளையாடு!-தமிழ்
 உணர்வை ஊட்டி நீயாடு!
பாடுபட்டே பொருள் தேடு-நல்ல
பண்பை என்றும் நீநாடு!
பீடுபெறுமே உன் வாழ்வு -உண்மைப்
பேசிடின் பெறுவாய் நல்வாழ்வு
கோடி தரினும் மயங்காதே-ஏற்ற
கொள்கையைக் காக்க தயங்காதே!

இயற்கையை பேணிக் காப்பாயே-நன்கு
எண்ணி எதையும் செய்வாயே!
செயற்கையைத் தேடி அலையாதே-நம்
செந்தமிழ் பேச மறக்காதே!
முயற்சி ஒன்றேத் திருவினையாம்-நீ
முயன்றால் வெற்றி அவ்வினையாம்
அயர்ச்சிக் கொள்ளா வேண்டாமே-வீணே
அலட்டிக் கொள்ளவும் வேண்டாமே!

ஒவ்வொரு நாளும் விளையாடு!-பழுது
உரிமைக்கு வந்தால் போராடு!
எவ்வழி நல்வழி அதைநாடு-பிறர்
ஏய்க வந்தால் நீசாடு
இவ்வழிப் போற்றி விளையாடு-எனில்
என்றும் வாரா ஒருகேடு
செவ்வழி இவையே நலங்காண-பிறர்
செப்பும் பெருமை உளம்பூண
 
                     புலவர் சா இராமாநுசம்

13 comments :

  1. குழந்தைகளுக்கு பாடப்புத்தகத்தில் சேர்க்க வேண்டிய கவிதை ஐயா அருமை.

    ReplyDelete
  2. பெரியவர்களுக்கும் இது பொருந்துமே அய்யா:)

    ReplyDelete
  3. மிக்க நன்றி!

    ReplyDelete
  4. மிக்க நன்றி!

    ReplyDelete
  5. அருமையான அறிவுரை ஐயா!

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...