Thursday, January 18, 2018

இனிய வலைப்பதிவு உறவுகளே! வணக்கம்!


இனிய வலைப்பதிவு  உறவுகளே!
       வணக்கம்!
    கடந்த  சில நாட்களாகவே  என் நெஞ்சில்
ஒரு நெருடல்! அது, எப்படி இருந்த  பதிவுலகம் இப்படி
ஆகிவிட்டதே என்ற ஆதங்கம்தான்   !இன்று என்னை
மேலும் வருத்தமுறச் செய்து  விட்டது தமிழ்மண
வாசகர் பரிந்துரையில் ஓர் இடுகை கூட இடம் பெற
வில்லை என்ற காட்சி!
     காரணம் நான்  உணர்ந்த வகையில் தமிழ்
மணத்தில் வைக்கப் பட்டுள்ள மதிப் பெண் பட்டையே
ஆகும் தெரிந்தோ தெரியாமலே, அறிந்தோ அறியாமலோ
உள்ளுற ஒரு போட்டி மனப்பான்மை வளர்ந்து  வருகிறது
என்பதே என்  தாழ்மையான  கருத்து! பதிவர்கள் எப்படிக்
கருதுகிறார்களோ  நான் அறியேன்!

      எனவே நான் இன்று  முதல் ஒரு முடிவெடுத்துள்ளேன்
மேலும் இது என் வேண்டு கோளாகவும்  அறிவிப்பாகவும் ஆகும்
அருள் கூர்ந்து ,இனி யாரும் என்பதிவுகளுக்கு ,மறுமொழி மட்டும்
போதும்  மதிப்பெண் போட வேண்டாம் என்பதோடு நானும்
யார் பதிவுக்கும் மறுமொழிமட்டுமே போட்டு மதிப்பெண்
 போடமாட்டேன்! என்பதை அன்போடு தெரிவித்துக்
கொள்கிறேன்!  மன்னிக்க!

    புலவர்  சா  இராமாநுசம்

10 comments :

 1. தங்கள் எண்ணம் சரியானதே ஐயா...
  நானெல்லாம் தமிழ்மண ஓட்டு, மகுடம் எதையும் பற்றி யோசிப்பதில்லை.
  எழுத நேரம் கிடைக்கும் போது எழுதுவதுடன் சரி.

  ReplyDelete
 2. வணக்கம் ஐயா இன்று எந்த பதிவுகளுமே தமிழ்மணத்தில் இணையவில்லை ஓட்டுப்பட்டையையும் காண முடியவில்லை.

  இனி யாரும், யாருக்குமே ஓட்டுப்போட முடியாதோ ? என்பது ஐயமே.

  ReplyDelete
 3. முன்பும் சரி, இப்போதும் சரி. வாக்களிப்பது என் வழக்கம். மகுடம் ஏறுகிறதா, வாசகர் பரிந்துரையில் வருகிறதா என்றெல்லாம் பார்ப்பதில்லை. வராவிட்டால் கவலைப் படுவதுமில்லை. இன்றும் வாக்களித்துவிட்டே செல்கிறேன்.

  ReplyDelete
 4. இன்று வேறு ஏதோ பிரச்சனை இருக்கிறது என்று நினைக்கிறேன். சில தளங்களில் காலையில் வாக்களித்தேன், இப்போது தமிழ்மணப் பட்டையையே காணவில்லை.

  ஏன் 'போட்டி மனப்பான்மை' என்று நினைக்கிறீர்களோ. பதிவுதானே முக்கியம். வாழ்த்துகள் புலவர் ஐயா.

  ReplyDelete
 5. ஏதேனும் தொழில் நுட்பக் கோளாறு காரணமாக, தமிழ் மணம் பட்டை காணாமல் போயிருக்கலாம். இதோ இப்பொழுது ஓட்டுப் பட்டை காட்சி அளிக்கிறது ஐயா.
  என்னைப் பொறுத்தவரை, நான் படிக்கும் ஒவ்வொரு பதிவிற்கும் வாக்களிக்கிறேன் ஐயா.

  விருப்பமுடையோர் எனக்கும் வாக்களிக்கிறார்கள். மற்றபடி தமிழ் மணத்தில் முன்னனியில் இருக்க வேண்டும் என்ற ஆசையெல்லாம் கிடையாது ஐயா.
  அதிக எண்ணிக்கையிலான வாசகர்களைச் சென்று சேர, தமிழ் மணம் உதவுகிறது.அவ்வகையில் மகிழ்வோம்
  வாக்களித்திருக்கிறேன்
  வருந்த வேண்டாம் ஐயா

  ReplyDelete
 6. வாக்கு இடுவது நேரம் அமைகின்றபோது மட்டுமே தமிழ்மணம் ஓட்டுப்பட்டை என் தளத்தில் இப்போது இல்லை முன்னர் போல தமிழ்மணம் பக்கமும் நானும் போவதில்லை ஐயா.பதிவுகள் மகிழ்ச்சிக்காக அன்றி போட்டிக்காக எழுதுவதில்லை என்பது என் நிலை. தொடர்ந்தும் பயணிப்போம் ஐயா.

  ReplyDelete
 7. தமிழ்மணத்துக்கு அதிக முக்கியத்துவம் தராவிட்டால், உங்களுக்கு இது போட்டியாகுதே எனும் எண்ணம் தோன்றி வருந்த மாட்டீங்களே.. அதைப்பற்றி ஏன் நினைக்கிறீங்கள்... நிறையக் கொமெண்ட்ஸ் போட்டாலும் திட்டுறீங்க.. வோட் போட்டாலும் போட்டி என்கிறீங்க... நீங்க அதிகம் மனதைப் போட்டுக் குழப்புறீங்க என நினைக்கிறேன், எல்லோர் பக்கமும் போய்க் கொமெண்ட் போட்டுப் பேசி மகிழுங்கோ... நாமும் வருவோம்... எல்லோரும் வருவார்கள்...

  தமிழ்மணம் பற்றிக் கவலை வேண்டாம்... அது ஒரு எக்ஸ்ட்டா பூஸ்ட் அவ்வளவே:)..

  ReplyDelete
 8. தமிழ்மணத்தில் இப்போது இந்த அறிவிப்பு ஓடிக் கொண்டு இருக்கிறது.

  // தளம் பராமரிப்பு வேலை தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தளத்தின் சேவையில் ஏற்பட்டுள்ள தடங்கலுக்கு வருந்துகிறோம். விரைவில் தமிழ்மணம்/திரைமணம் தளங்கள் செயல்பட தொடங்கும் //

  நல்லதே நடக்கும் என்று நம்புவோம். விரைவில் தமிழ்மணம் தனது பணியைத் தொடர்ந்திட வாழ்த்துகள்.

  ReplyDelete
 9. அனைவருக்கும் மிக்க நன்றி!

  ReplyDelete
 10. தமிழ்மணம் நம் பதிவுகளை உலகிற்கு எடுத்து செல்லும் ஒரு இணைப்பாக கருதி அதற்கு துணையாக இருக்கும் தமிழ்மண நிர்வாகிகளுக்கு நன்றி சொல்லி செல்வோம்

  ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...