இனிய
வலைப்பதிவு உறவுகளே!
வணக்கம்!
கடந்த
சில நாட்களாகவே என் நெஞ்சில்
ஒரு
நெருடல்! அது, எப்படி இருந்த பதிவுலகம் இப்படி
ஆகிவிட்டதே
என்ற ஆதங்கம்தான் !இன்று என்னை
மேலும்
வருத்தமுறச் செய்து விட்டது தமிழ்மண
வாசகர்
பரிந்துரையில் ஓர் இடுகை கூட இடம் பெற
வில்லை
என்ற காட்சி!
காரணம் நான் உணர்ந்த வகையில் தமிழ்
மணத்தில்
வைக்கப் பட்டுள்ள மதிப் பெண் பட்டையே
ஆகும்
தெரிந்தோ தெரியாமலே, அறிந்தோ அறியாமலோ
உள்ளுற
ஒரு போட்டி மனப்பான்மை வளர்ந்து வருகிறது
என்பதே
என் தாழ்மையான கருத்து! பதிவர்கள் எப்படிக்
கருதுகிறார்களோ நான் அறியேன்!
எனவே நான் இன்று முதல் ஒரு முடிவெடுத்துள்ளேன்
மேலும்
இது என் வேண்டு கோளாகவும் அறிவிப்பாகவும் ஆகும்
அருள்
கூர்ந்து ,இனி யாரும் என்பதிவுகளுக்கு ,மறுமொழி மட்டும்
போதும்
மதிப்பெண் போட வேண்டாம் என்பதோடு நானும்
யார்
பதிவுக்கும் மறுமொழிமட்டுமே போட்டு மதிப்பெண்
போடமாட்டேன்! என்பதை அன்போடு தெரிவித்துக்
கொள்கிறேன்! மன்னிக்க!
புலவர்
சா இராமாநுசம்

