Wednesday, January 3, 2018

நடுங்கும் குளிரில் வாடுகின்றேன்-கற்ற நற்றமிழ் போர்வையால் பாடுகின்றேன்



நடுங்கும் குளிரில் வாடுகின்றேன்-கற்ற
நற்றமிழ் போர்வையால் பாடுகின்றேன்
ஒடுங்கிட ஐம்பொறி வாடையிலே-மேலும்
உடுத்திட கம்பளி ஆடையிலே
அடங்கிட தந்தது செம்மைதனை-துன்பம்
அகன்றது அடைந்தது வெம்மைதனை
தொடங்கிய கவிதையை முடித்திடவே-உறவும்
தொடர்ந்து நாளும் படித்திடவே


புலவர் சா இராமாநுசம்

10 comments :

  1. வலை உறவுகள் தொடரும் ஐயா
    த.ம.பிறகு

    ReplyDelete
  2. நான் படிச்சுட்டேன்

    ReplyDelete
  3. சென்னையில் குளிரா

    ReplyDelete
  4. இந்த குளிருக்கே இப்படி கவிதை பாடினால் எங்கள் ஊர் குளிருக்கு காவியமே படைத்துவிடுவீர்கள்....

    ReplyDelete
  5. வலை உறவுகள் என்றென்றும் தொடரும் ஐயா
    தம +1

    ReplyDelete
  6. குளிர் அங்கே இருக்கிறதா என்ன?

    ReplyDelete
  7. குளிருக்குக் கம்பளி?... ஊரில்:).. நல்ல கற்பனை...

    ReplyDelete
  8. குளிருக்குப் போர்வை தமிழ்.

    ReplyDelete
  9. ''நடுங்கும் குளிரில் வாடுகின்றேன்-''

    குளிரில் நாம் நடுங்குவோம். குளிர் நடுங்குமா?

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...