அன்பின் இனிய உறவுகளே! வணக்கம்!
ஒரு மகிழ்ச்சியான செய்தி!
என் வலைவழி நான் எழுதிய சில கவிதைகளைத் தொகுத்து, வலையில் வந்தே அலையில் மிதக்கும் கவிதைகள் என்ற பெயரில் ,நூலாக( ஓராண்டுக்கு முன்னதாக,)
சீதை பதிப்பகத்தின் வாயிலாக வெளி வந்தது
தற்போது அப் புத்தகத்திற்கு , தமிழ்நாடு மத்திய
நூலக ஆணைக்குழு ஆயிரம் பிரதிகளை வாங்க அனுமதி
வழங்கியதோடு, வாங்கியும் விட்டது என்பதை அன்போடு தெரிவித்துக்
கொள்கிறேன்
நூலை வெளியிட்ட சீதை பதிப்பகத்திற்கும். மத்திய நூலக
ஆணைக்குழவிற்கும் , தமிழக அரசுக்கும், என்னை நாளும்
ஆதரித்து ஆக்கமும் ஊக்கமும் தரும் அன்பு உறவுகளாகிய உங்களுக்கும் உளம் கனிந்த நன்றி! நன்றி!
புலவர் சா இராமாநுசம்

