Showing posts with label எண்ணங்கள் அலைகள் மனதில் மோதும் அனுபவம் வடிவம் கவிதை. Show all posts
Showing posts with label எண்ணங்கள் அலைகள் மனதில் மோதும் அனுபவம் வடிவம் கவிதை. Show all posts

Saturday, October 31, 2015

நினைவும் கனவும்!


நினைவு!

கரைதாண்டி வாராத அலைபோல நினைவே-நெஞ்சக்
கண்மூட முயன்றாலும் கலையாத கனவே
தரைபட்ட மீனாக துடித்திடுவாய் ஏனோ-உரிய
தடமாறி தடுமாறி தவித்திடுவாய் தானோ
சிறைபட்ட பறவையென சிலநேரம் கிடப்பாய்-உயர்
சிந்தனையின் வயப்பட்டே கவிதைகளைப் படைப்பாய்
குறைபட்டும், குறைசொல்லும், குறையெதற்காம்! தேவை-நற்
குணங்காணும் வழிச்சென்று செய்திடுவாய் சேவை


புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...