Showing posts with label என் ஐரோப்பிய சுற்றுப் பயணம் பகுதி ஏழு. Show all posts
Showing posts with label என் ஐரோப்பிய சுற்றுப் பயணம் பகுதி ஏழு. Show all posts

Monday, September 23, 2013

என் ஐரோப்பிய சுற்றுப் பயணம் பகுதி- ஏழு






           இலண்டன்(-4-8-2013)
      
      என்னால்  மேலும் இனி நடக்க இயலாது  நீங்கள்  அனைவரும்
போங்கள்! நான் பார்க்கா விட்டாலும்  பரவாயில்லை நேரமாகிவிடும் என்று  கூறி  என் கைப்பையையும்  நண்பரிடம் கொடுத்து விட்டு வழிகாட்டியிடம்
என்னை மட்டும்  உட்கார (பாதுகாப்பாக) இடத்தைக்  ஏற்பாடு  செய்ய முடியுமா என்று கேட்டேன்

       அவர், சற்று பொறுங்கள்  என்று கூறி, பயண ஏற்பாட்டாளர்
இராசேந்திரரோடு  உள்ளே சென்று யாரிடமோ  பேசிவிட்டு திரும்பி
வந்து , உங்களுக்கு சக்கர நாற்காலி வண்டி ஏற்பாடு  செய்துள்ளோம்
என்று சொல்ல, இராசேந்திரர், உங்களோடு நான்  வருகிறேன் வழிகாட்டி அவர்களோடு போவார் என்றார்


        அது வேறு வாயில்  என்பதால் அதைத் தேடிப் போனோம் அங்குள்ள
காவலரிடம் கேட்டதும்  அவர் தன்  கையில்  உள்ள தொலை பேசி வாயிலாக தகவல்  தெரிவிக்க பத்துநிமிடங்களுக்குள் ஆட்டோ போல
ஒரு வண்டி  வந்தது அதில் எங்களை ஏற்றிவிட சென்று இறங்கினோம்

     அங்கு சக்கர நாற்காலி வண்டி தயராக இருந்தது அதில் நான்
அமர்ந்தேன் . திரு இராசேந்தரிடம் ஏதேதோ கேட்டு எழுதி கையெழுத்தும்
வாங்கினார்கள் அதன்பின் அவரே வண்டியை தள்ளத் தொடங்கினார்
அதனால் நான்  மிகவும் துன்பத்தோடு அவரிடம் வருத்தம்  தெரிவிக்க
அவர், என் தந்தையைப்  போல உள்ள உங்களுக்கு  சேவை செய்ய
ஒரு வாய்ப்பு  கிடைத்ததே என்று சொன்னதைக் கேட்டு நெகிழ்ந்து
போனேன்

       சக்கர நாற்காலியில்  செல்வதற்கென்றே உரிய வழி ஏற்ற இறக்கங்களுடன்  இருந்ததால்  எதுவும்  சிரமமின்றி ஒரு  மணிநேரத்திற்கு
மேல்  சுற்றினோம் மிகப்  பெரிய  அரண்மனை! நேர்த்தியாக கட்டப் பட்டு
இருந்தாலும்  எங்கு  பார்த்தாலும்  (முழுவதும்) வழிவழி  வந்த  இராச பரம்பரை பற்றிய  வரலாறு, முடிசூட்டிக்  கொள்வது இராணுவ  அணிவகுப்பு
ஆகியன  பற்றியே, ஓவியங்களாக,தீட்டப்பட்டும்  புகைப் படங்களாவும்
இருந்தன! சில குறும்  படங்களும் ஆங்காங்கே காட்டப் பட்டன இது காணும்
மக்களுக்கு ஒருவித சலிப்பைத்தான் ஏற்படுத்தும் என்பதே  என் கருத்து புகைப்படக் கருவியும் ,பையும்  நண்பரிடம் இருந்ததால் படமெடுக்க வில்லை! அது  எனக்கு அவசியமாகவும் படவில்லை!

         அன்று  பகல் இரண்டுமணி அளவில் இலண்டனை விட்டு  பாரிஸ்
செல்ல யூரோஸ்டார் என்னும் அதிவேக இரயில் (,கடலுக்குள்  செல்வது)மூலம்  ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால்  நாங்கள்   சென்றவாறே
வெளியில் வந்தோம்
        
         அங்கே வண்டியும் மற்றவர்களும் வந்துவிட சென்று  பகல் உணவை முடித்துக்  கொண்டு  இரயில்  நிலையத்தை அடைந்தோம்
  
      கீழே சில படங்கள்! இலண்டன் ஐ ,யில் மேலிருந்து எடுத்த
என்னால் எடுக்க முடியாமல் போன காட்சிகள்( நண்பரிடம் பெற்றேன்)
இடம்  பெற்றுள்ளதைக் காணலாம் அரண்மனை வெளித் தோற்றங்கள்
இரயில் நிலையம் ஆகியனவும்  காணலாம்!
 .






















       

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...