Showing posts with label காந்தி படம் அகற்றல் கோட்சே கோயில் சிலை கொடுமை. Show all posts
Showing posts with label காந்தி படம் அகற்றல் கோட்சே கோயில் சிலை கொடுமை. Show all posts

Tuesday, January 6, 2015

சற்று நாவடக்கம் காத்திடுமாம் நாட்டை அதுவே!


அண்ணல்காந்திப் படத்தினயே அகற்றச் சொல்லும்-அந்த
ஆணவத்தை கேட்டீரா! உயிரைக் கொல்லும்!
எண்ணமென்ன மதவெறியா! ? வேண்டாம் இங்கே- ஊதி
எழுப்புவதா ஒற்றுமையைக் குலைக்கும் சங்கே!

கோயில் கட்டப் போகின்றார் கோட்சேவுகாம்-அதில்
கும்பிடவும் சிலை வைப்பார் கோட்சேவுகாம்-!
நோயுள்ளம் பெற்றாராம் அந்தோ இவரே-நல்ல
நோக்கமில்லார்! இவருக்கு இல்லை நிகரே!

தேசபிதா அவரென்று உலகம் போற்றும்-அறவழி
தேடிதந்த சுதந்திரத்தை என்றும் சாற்றும்!
நாசபுத்திக் காரர்களே போதும் இதுவே-சற்று
நாவடக்கம் காத்திடுமாம் நாட்டை அதுவே!

புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...