Showing posts with label பழி பாவம் அச்சம்அறவே நீங்கும் அவலம் வேதனை கவிதை புனைவு. Show all posts
Showing posts with label பழி பாவம் அச்சம்அறவே நீங்கும் அவலம் வேதனை கவிதை புனைவு. Show all posts

Saturday, May 23, 2015

துடிப்பது இழந்த தோணியென-வாழ்வைத் தொலைத்தவன் இருப்பதா!? கோழையென!?



எண்ணி எண்ணிப் பார்க்கின்றேன் –வீணில்
இதயத்தில் சுமையே சேர்க்கின்றேன்!
கண்ணியம் அறவே காணவில்லை-பெற்ற
கடனை மறுக்க நாணவில்லை!
புண்ணியம் பாவம் பார்ப்தெவர்?- பெரும்
பொருளைத் தேடவே முயலாதவர்!
மண்ணிலே பிழைக்கத் தெரியாதவர்-என்றே
மக்கள் நினைப்பதை அறியாதவர்!


குடிப்பதும் பெருமை ஆயிற்றாம் –என்ற
கொடுமை நிலையாய் போயிற்றாம்!
படிப்பதும் விற்பனைப் பொருளாகும்-வசதி
படைத்தவர் இன்றெனில் இருளாகும்!
வெடிப்பது ஏழைகள் நெஞ்சம்தான் –ஏற்ற
விலைதரும் எவர்க்கும் மஞ்சம்தான் !
துடிப்பது இழந்த தோணியென-வாழ்வைத்
தொலைத்தவன் இருப்பதா!? கோழையென!?

புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...