Showing posts with label மனிதன் உலகம் வழ்வியல் நடைமுறை கவிதை புனைவு. Show all posts
Showing posts with label மனிதன் உலகம் வழ்வியல் நடைமுறை கவிதை புனைவு. Show all posts

Wednesday, May 20, 2015

மனிதா மனிதா அறிந்தாயா-ஒருநாள் மரணம் உண்டெனத் தெரிந்தாயா!



மனிதா மனிதா அறிந்தாயா-ஒருநாள்
மரணம் உண்டெனத் தெரிந்தாயா!
இனிதாய் இருப்பதும் இவ்வுலகே-தீரா
இன்னல் தருவதும் இவ்வுலகே!
புனிதா என்றே போற்றுவதும்-பெரும்
பொய்யன் என்று தூற்றுவதும்!
நனிதா! அல்ல! நடைமுறையே –என்றும்
நம்மிடைய உள்ள பெருங்குறையே!


ஏனோ வீணில் அலைகின்றாய் –நாளும்
எதற்கே உள்ளம் குலைகின்றாய்!
தேனாய் இனிப்பதும் சிலநேரம் –கடும்
தேளாய் கொட்டும் சிலநேரம்!
தானாய் அறிவதும் உண்டாமே-செல்லும்
தடமது ஆய்ந்து கொண்டாமே!
போனால் புகழ்வரும் ஒன்றாமே –இதுவே
புரிந்தால் வாழ்வே நன்றாமே!!

புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...