எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு
ஏழைக்கு எட்டா கனியது ஆச்சு
பொங்கும் வறுமையைப் போக்கிட இயலா
போலிகள் ஆட்சியும் வெறுமையே! முயலா
தங்கும் முழக்கங்கள் மேடையில் ஒலிக்க
தந்திட மின்னொளி கொடிகளோ பறக்க
மங்கும் மறுநாள் அனைத்துமே ஓயும்
மறந்திட ஆமே சுதந்திரம் தாமே
புலவர் சா இராமாநுசம்

