Tuesday, July 5, 2011

ஏனோ தொடங்கினேன் வலைப் பூவே

    ஏனோ தொடங்கினேன் வலைப் பூவே-பலவும்
    எழுதிட நாளும் களைப் பாவே
    தேனாய் இனித்தது தொடக் கத்தில்-ஏதும்
    தேடுத லின்றி இதயத் தில்
    தானாய் வந்தது அலை போல-இன்று
    தவியாய் தவிக்குதே சிலை போல
    வானாய் விரிந்திட சிந்தனை கள்-கவிதை
    வடித்தால் வருஞ்சில நிந்தனை கள்  

    உண்ணும உணவும் மறந் தாச்சே-அந்த
    உணவின் சுவையும் துறந் தாச்சே
    எண்ண மெல்லாம் வலைப் பூவே-பொழுதும்
    எழுதத் தூண்டின தலைப்  பூவே
    போதை கொண்டவன் நிலை யுற்றேன்-நாளும்
    புலம்பும் பயித்திய  நிலை பெற்றேன்
    பொழுதும் சாய்ந்தே போன துவே-களைப்பில்
    புலவன் குரலும் ஓய்ந்த துவே

    பாதி இரவில் எழுந் திடுவேன்-உடன்
    பரக்க பரக்க எழுதி டுவேன்
    வீதியில் ஒசைவந்த வுடன்-அடடா
    விடிந்த உணரவும் வந்தி டிமே
    தேதி கேட்டால தெரி யாதே-அன்றைய
    தினத்தின் பெயரும் தெரி யாதே
    காதில் அழைப்பது விழுந் தாலும-என்
    கவன மதிலே செல்வ தில்லை

    படுத்த படிய சிந்திப் பேன்-என்
    பக்கத் தில் பேனா தாளுமே
    தொடுக்க நெஞ்சில் இரு வரிகள்-வந்து
    தோன்றும் ஆனல் நிறை  வில்லை
    அடுத்த வரிகள் காணா தாம்-அந்தோ
    அலையும் நெஞ்சே வீணா தாம்
    எடுத்த பாடல் முடியா தாம்- எனினும்
    ஏனோ  இதயம் ஒயா தாம்

    அப்பா  வேதனை ஆம்  அப்பா-தினம்
    ஆனது என் நிலை பாரப்பா
    தப்பா-?  தொடங்கின வலைப் பூவே-நெஞ்சம்
    தவிக்க எண்ணம் சலிப் பாவே
    ஒப்பா யிருந்ததே என் னுள்ளம்-தேடி
    ஓடுமா சிந்தனை பெரு வெள்ளம்
    இப்பா போதும் முடி யப்பா-சோர்வு
    எழவே தொடரா படி யப்பா

              புலவர் சா இராமாநுசம்

40 comments :

  1. தாங்கள் காடு மேடு அலைந்து தேனீக்களின் கொட்டுப்பட்டு
    எடுத்து தருகிற கவித்தேனை
    நாங்கள் எளிதாக சுவைத்து இன்புறுகிறோம்
    தாங்கள் கவிஞன் கவிதைப் பெண்ணைக் கைப்பிடிக்க
    படிகிற அவஸ்தையைக் கூட ரசிக்கும் படியாக
    இனிக்கும் படியாக சொல்லிப் போவது அருமையிலும் அருமை
    சிலையை வைத்து பாடம் கற்றுக் கொண்ட ஏகலைவன் போல
    தங்கள் கவிதை கொண்டு பாடம் படிப்பவர்கள்
    நிறையப் பேர் பதிவுலகில் இருக்கிறோம் என்பதை மனதில் கொள்ளவேணுமாய்
    அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
    அட்டகாசமான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. ஒரு பதிவரின் நிலையை அழகிய வார்த்தைகள் கொண்டு கவிதையாக்கி சாதித்து விட்டீர் ....இன்னும் வேண்டும் உங்கள் தமிழ் எங்கள் தமிழ் செழித்திடவே நன்றி நன்றி

    ReplyDelete
  3. வணக்கம் ஐயா
    நான் ரமணி சாரின் கருத்தை முழுதாய் வழி மொழிகிறேன்
    உங்களின் கவிதை படித்து மகிழ்ந்து வரும் எங்களைப் போன்றவர்களுக்காகவவது எழுதுங்கள்
    தமிழ் கடமை ஆற்றுங்கள்

    ReplyDelete
  4. காதில் அழைப்பது விழுந் தாலும-என்
    கவன மதிலே செல்வ தில்லை

    அப்ப ஆத்துக்காரிட்ட பேச்சு கிடைக்குமே

    ReplyDelete
  5. அவளைத்தொடுவான் ஏன் கவலைப்படுவான் ஏன்

    ReplyDelete
  6. தொடர்ந்து படித்தும் எழுதியும் வருகிற பலரின் அவஸ்தைதான் இது.

    உங்கள் வார்த்தைகளில் அருமையாய் வந்திருக்கிறது ராமாநுசம் ஐயா.

    ReplyDelete
  7. எண்ண மெல்லாம் வலைப் பூவே-பொழுதும்
    எழுதத் தூண்டின தலைப் பூவே//

    வண்ணமும், வாசமும் நிரம்பிய
    கவிதைப் பூவிற்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  8. பதிவுலக போதையும் சில நேரங்களில் வரும் சலிப்பும் உங்கள் கவிதையில் அருமையாக வெளி வந்திருக்கின்றன!தொடர்ந்து கவிதை படையுங்கள்!அதைப் பார்த்துக் கொஞ்சமாவது உண்மையான கவிதை எழுதக் கற்றுக் கொள்கிறேன்!

    ReplyDelete
  9. //எண்ண மெல்லாம் வலைப் பூவே-பொழுதும்
    எழுதத் தூண்டின தலைப் பூவே//

    //காதில் அழைப்பது விழுந் தாலும-என்
    கவன மதிலே செல்வ தில்லை//

    பதிவர்கள் பலரின் எண்ணங்களை, தவிப்புகளை, மதிமயங்க வைக்கும் கற்பனை உலக சஞ்சாரத்தை வெகு அழகாகத் தொடுத்துக் கொடுத்துள்ள, தங்களுக்கு என் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  10. Ramani said...

    சிலையை வைத்து பாடம் கற்றுக் கொண்ட ஏகலைவன் போல
    தங்கள் கவிதை கொண்டு பாடம் படிப்பவர்கள்
    நிறையப் பேர் பதிவுலகில் இருக்கிறோம்

    சகோ இரமணி அவர்களே தங்களி்ன் இந்த
    பாராட்டு எனக்கல்ல, நான் கற்ற தமிழுக்கே உரியது
    இருந்தாலும்,நன்றி நன்றி
    இராமாநுசம்

    ReplyDelete
  11. ரியாஸ் அஹமது said...

    என்றும் போல் இன்றும் வழங்கிய
    தம்பி நன்றி
    இராமாநுசம்

    ReplyDelete
  12. வேடந்தாங்கல் - கருன் *! said

    நன்றி நண்பரே


    இராமாநுசம்

    ReplyDelete
  13. ராஜகோபாலன் said...

    முன் மொழிந்தார் இரமணி
    பின் மொழிந்தார் ராஜா

    நன்றி சகோ

    இராமாநுசம்

    ReplyDelete
  14. கவி அழகன் said
    அப்ப ஆத்துக்காரிட்ட பேச்சு கிடைக்குமே
    தம்பீ, அவபோயி இரண்டு வருடமாயிற்றே
    என்றாலும், அவள் தானே இங்கே கவிதையாக
    வந்து கொண்டிருக்கிறாள்
    நன்றி
    இராமாநுசம்

    ReplyDelete
  15. சுந்தர்ஜி said...

    அள்ளித் தெளிக்கும் நீரே-வாழ்த்து
    அனுப்பினீர் பெற்றேன் பேறே
    தெள்ளிய தீந்தமிழ் மொழியே-நான்
    தேடிக் கற்றதன் வழியே
    சொல்லினேன் கவிதை நானே-உங்கள்
    சொற்கள் எனக்குத் தேனே
    நல்லன எடுத்துச் சொல்வீர்-கருத்தை
    நாளும் இங்கே தருவீர்
    நன்றி
    இராமாநுசம்


    -

    ReplyDelete
  16. இராஜராஜேஸ்வரி said...

    வண்ணமும், வாசமும் நிரம்பிய
    கவிதைப் பூவிற்குப் பாராட்டுக்கள்

    கை வண்ண சகோதரிக்கு இந்தக் கவி அண்ணன் நன்றி
    இராமாநுசம்

    ReplyDelete
  17. சென்னை பித்தன் said

    ஐயா
    நான் குடத்துள் உள்ள விளக்கே என்னை
    குன்றின் மேல் வைத்த விளக்கா மிகைப்
    படுத்திய உங்கள் பெரும் தன்மைக்கு எடுத்துக்
    காட்டு நன்றி
    இராமாநுசம்

    ReplyDelete
  18. .கோபாலகிருஷ்ணன் said

    //எண்ண மெல்லாம் வலைப் பூவே-பொழுதும்
    எழுதத் தூண்டின தலைப் பூவே//

    ஐயா வரிகளை எடுதுக்காட்டி-நீர்
    வழங்கிய பாராட்டுக்கு
    உரியவனல்ல எனினும்-இங்கே
    உரைத்திட்டேன் நன்றிநன்றி

    இராமாநுசம்

    ReplyDelete
  19. தொடர்ந்தும் மரபுக் கவிதைகளால் எங்கள் மனதினை மகிழ்வுறச் செய்ய வேண்டும் ஐயா.

    வலைப் பூவானது தொட்டால் இலகுவில் விட முடியாத போதை நிறை உலகம் என்பதனை அற்புதமாக உங்கள் கவிதையில் வடித்திருக்கிறீங்க..

    தொடர்ந்தும் எழுதுங்கள். கூடவே வருவோம்.

    ReplyDelete
  20. அய்யா
    தங்களின் பதிவுகள் அனைத்தும் நன்றாகத்தான் உள்ளது ...தங்களின் சிந்தனை நாளும் தேவை இந்த நாட்டுக்கு

    ReplyDelete
  21. //உண்ணும உணவும் மறந் தாச்சே-அந்த
    உணவின் சுவையும் துறந் தாச்சே
    எண்ண மெல்லாம் வலைப் பூவே-பொழுதும்
    எழுதத் தூண்டின தலைப் பூவே
    போதை கொண்டவன் நிலை யுற்றேன்-நாளும்
    புலம்பும் பயித்திய நிலை பெற்றேன்
    பொழுதும் சாய்ந்தே போன துவே-களைப்பில்
    புலவன் குரலும் ஓய்ந்த துவே //

    ” விடைபெறும் பதிவர்கள் “ என்ற எனது பதிவை போட்டுவிட்டு வந்தால் எனது முகப்பு பலகை (DASHBOARD) - இல் உங்கள் கவிதை. முன்பே பார்த்து இருந்தால் எனது இந்த பதிவில் உங்களின் இந்த வரிகளை மேற்கோளாக தந்து இருப்பேன்.

    ReplyDelete
  22. வலைப்பூவின் தாக்கம் வரிகளில் விளையாடுது - நல்ல சொன்னீங்க

    ReplyDelete
  23. வலைக்கும் உங்களுக்குமான உறவை கவிதையால் சொல்லிவிட்டீர்கள்..

    ReplyDelete
  24. ஐயா நீண்ட நாட்களுக்குப் பின் வருகிறேன்...
    மிக அருமை.

    சென்னைப் பதிவர் விழாவில் தங்கள் பங்களிப்பு பற்றி அறிகிறேன்.
    சென்னைப் பதிவர் விழா வெற்றி பெற வாழ்த்துக்கள். கலந்து கொள்ள முடியா நிலைக்கு வருந்துகிறேன்..

    ReplyDelete
  25. எழுத்தாளரின் எண்ணங்களை கவியாக்கிய விதம் அருமை ஐயா.

    ReplyDelete
  26. அனைவரின் நிலையும் இது தானோ ?
    ஆனால் 'பணம்' ஒன்றே உலகை ஆளுகிறது என்ற நினைப்பில் ...
    மண் விழுந்து விட்டது மகிழ்ச்சியே .
    இல்லை , இல்லை புகழ் [ பகிர்தல் ] ஒன்றே பெரிது என்று கூறுவது
    வலைப்பூக்கள்.
    கவிதை என்னமாய் இழைகிறது ஐயா !

    ReplyDelete
  27. ஐயா வணக்கம் ரொம்ப நாளுக்கு அப்புறம் வருகிறேன் .
    உங்கள் கவிதைகள் எப்புவும் போல அழகு
    வாழ்த்துக்கள்
    உடல் நலத்தில் கவனம் எடுங்கள்.

    ReplyDelete
  28. பதிவு எழுதுபவர்களின் மன நிலையை அப்படியே அழகான கவித்தமிழில் படம்பிடித்துக் காட்டிவிட்டீர்கள். இவை ஒவ்வொன்றும் நிஜம்.
    இதிலிருந்து மீள்வதற்கும் வழி சொல்லுங்கள் ஐயா!
    த.ம. 1

    ReplyDelete
  29. எனது டேஷ் போர்டு தங்கள் பதிவு இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாக வெளியானதாக தெரிவிக்கிறது.
    கிளிக் செய்து பார்த்தபோது கருத்தும் வாக்கும் 0 என்றே காண்பித்தது நான் கருத்தும் வாக்கும் இட்ட பின்னர் பார்த்தபோது உண்மையில் 28 கருத்துக்கள் பதிவாகி உள்ளது. மீண்டும் பார்க்கும்போது வாக்கு மட்டும் 1 காண்பிக்கிறது.கருத்துக்கள் 0 என்றே காண்பிக்கிறது. நிரலில் ஏதாவது மாற்றம் செய்திருக்கிறீர்களா?அல்லது என் கணினியில் பிழையா?
    சரிபாருங்கள் அய்யா!

    ReplyDelete
  30. //உண்ணும உணவும் மறந் தாச்சே-அந்த
    உணவின் சுவையும் துறந் தாச்சே
    எண்ண மெல்லாம் வலைப் பூவே-பொழுதும்
    எழுதத் தூண்டின தலைப் பூவே//

    சரியாய் சொன்னீர்கள்.உங்களது கவிதையின் ஒவ்வொரு வரியும் எல்லா பதிவர்களுக்கும் பொருந்தும். வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  31. படுத்த படிய சிந்திப் பேன்-என்
    பக்கத் தில் பேனா தாளுமே
    தொடுக்க நெஞ்சில் இரு வரிகள்-வந்து
    தோன்றும் ஆனல் நிறை வில்லை
    அடுத்த வரிகள் காணா தாம்-அந்தோ
    அலையும் நெஞ்சே வீணா தாம்
    எடுத்த பாடல் முடியா தாம்- எனினும்
    ஏனோ இதயம் ஒயா தாம்//


    பிடிகிடைக்காது படைப்பாளிகள் படும் அவதியை
    மிக மிக அழகாகப் பதிவு செய்துள்ளீர்கள்
    ஆனால் அதுவே ஒரு அருமையான
    படைப்பாகிப்போனதுதான் ஆச்ச்ரியம்
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  32. உங்கள் சிந்தனைக்கு பஞ்சமே இல்லை ஐயா...

    வாழ்த்துக்கள்... நன்றி... (TM 2)

    ReplyDelete
  33. வலைப்பூ கவிதை! அருமை ஐயா!
    இன்று என் தளத்தில்
    மனம் திருந்திய சதீஷ்
    அஞ்சலியுடன் நெருங்கும் சுந்தர் சியும் ஏழுமலையானின் கடனும்!

    http://thalirssb.blogspot.in

    ReplyDelete
  34. தமிழ் தேடி
    இளைப்பாறும்
    தங்கள் வலைப்பூவில்

    ஏனிந்த
    ஏக்க வினா
    எழுதுங்கள் எண்ணங்களை

    ஏறிட்டு பார்க்க
    எண்ணற்ற உள்ளங்கள்
    என்நாளும் உண்டு

    ReplyDelete
  35. அன்புநிறை பெருந்தகையே..
    வலைப்பதிவர்களின் நிலை பற்றி
    அழகாய் சொன்னீர்கள்...

    ReplyDelete
  36. ஐயா இது மீள பதிவா ஏற்கனவே வாசித்தது போல் உள்ளதே!

    ReplyDelete
  37. //பாதி இரவில் எழுந் திடுவேன்-உடன்

    பரக்க பரக்க எழுதி டுவேன்

    வீதியில் ஒசைவந்த வுடன்-அடடா

    விடிந்த உணரவும் வந்தி டிமே//

    அபாரம் ஐயா..

    ReplyDelete
  38. முதுமையின் வேதனைகளையும் மறக்கச் செய்யும் தமிழின் இனிமையும் தங்கள் கவிதைத் திறனும். வலைப்பூ என்னும் வசதி மட்டும் இல்லாதிருந்தால் இப்படி எத்தனைத் தமிழ்ப்பாக்கள் வெளிவரும் வாய்ப்பின்றி முடங்கிக்கிடந்திருக்குமோ? தங்கள் உடல்நிலையும் மனநிலையும் எப்போதும் உடன்பாடாய் அமைந்து இன்னும் பல்லாயிரம் பாக்களைப் படைக்க வேண்டுகிறேன். நல்வாழ்த்துக்கள் ஐயா.

    ReplyDelete
  39. அருமை வரிகள்..அத்தனையும் ..

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...