Saturday, August 6, 2011

சூரிய தேவனுக்கு...

கோடை ஆரம்பித்த போது எழுதிய கவிதை 

சூரிய தேவனுக்கென் வேண்டுகோளே-எமை
சுட்டிட எதிர்வரும் கோடைநாளே
வீரியம் குறைந்திட வாரும்ஐயா-எனில்
வெந்து மடிவோமே என்ன பொய்யா
ஏரியும் குளங்களும எங்கும்வற்ற-நீர்
இல்லாமல் புல்வெளி தீயும்பற்ற
வேரிலும் நீரின்றி செடிகொடிகள்-மாள
வேண்டாமே உம்முடை கெடுபிடிகள

கெட்டதே உலகெங்கும சுற்றுசூழல்-இந்த
கொடுமையில் உயிரினம் எவ்வண்வாழல்
விட்டுவிட்டே இங்கே பனியும பெய்ய-தரும்
வேதனை நீங்கட என்னசெய்ய
சொட்டும் மழையின்றி ஒருபக்கமே-வெள்ள
சோதனை தாங்காது மறுபக்கமே
திட்டமே உலகெங்கும் பேசுகின்றார்-ஆனால்
தீராது என்றென்றும் சுற்றுசூழல்மாசே

எதிர்கால சந்ததி நிலமைஎன்ன-அதை
எண்ணாமல் இன்றுள்ளோர் செய்வதென்ன
புதிதாக நாள்தோறும் இயற்கையன்னை-அழிய
போடுவார் அந்தோ திட்டம்தன்னை
மெதுவாக அழிவிங்கே தேடி வர-எனில்
மேலும் எதற்காக பாடல் தர
எதுவாக இருந்தாலும் காலம்சொல்லும்-இதன்
எதிர்வினை யாதென ஞாலம்சொல்லும்

புலவர்  சா இராமாநுசம்

20 comments :

  1. சிந்திக்க வைக்கும் கவிதை.

    ReplyDelete
  2. கெட்டதே உலகெங்கும சுற்றுசூழல்-இந்த
    கொடுமையில் உயிரினம் !!!!!!!!

    ReplyDelete
  3. சிந்தனையை தூண்டும் கவிதை..

    ReplyDelete
  4. ///////
    சொட்டும் மழையின்றி ஒருபக்கமே-வெள்ள
    சோதனை தாங்காது மறுபக்கமே /////


    இயற்க்கைக்கு எதிராக வேலைகள் செய்தால் இதுதான் முடிவு...

    ReplyDelete
  5. சிறந்த பதிவு.. பாராட்டுக்கள் பல...

    ReplyDelete
  6. எதிர்கால சந்ததி நிலமைஎன்ன-அதை
    எண்ணாமல் இன்றுள்ளோர் செய்வதென்ன //

    சிந்திக்கவைக்கும் சிறப்பான பகிர்வு.

    ReplyDelete
  7. ஒரு பக்கம் அனல் கக்கும் வெயில் இன்னொரு பக்கமோ வெள்ளக்காடு.... இப்படி இருந்தால் உயிர்கள் எப்படி நிம்மதியாக இருக்க முடியும் என்று மிக அருமையாக எழுதிய வரிகள் சிறப்பு ஐயா..

    அன்பு வாழ்த்துகள் ஐயா...

    ReplyDelete
  8. இயற்கையை என்னென்பேன். அதன் கொடுமையை ஏதென்பேன். வெந்துவெதும்பிப் புலம்புவதே எம் பலனாகும். சும்மா இருக்கமுடியாது, மனிதன் தேடல் செய்தலும் தேவையாகும். புரிந்து காத்தல் மனிதன் கடனாகும். இதைப்புரியச்செய்யும் இக்கவிதையாகும்.

    ReplyDelete
  9. வெயில் தாங்க முடியவில்லை.
    நல்ல கவிதை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. எப்பிடி ஐய்யா உங்களால் ஒவ்வொரு நாளும் அழகான கவிதைகள் படைக்க முடிகின்றது...!!?? வாழ்த்துக்கள் ஐய்யா..

    காட்டான் குழ போட்டான்..

    ReplyDelete
  11. ஆஸ்திரேலியா FM வானொலியில் ஒருவன் கங்கையை குப்பை என்று சொல்லிவிட்டானாம். மறுநாள் குப்பையை கொட்டிய மக்கள் மன்னிப்பு கேட்க வைத்துவிட்டார்கள்

    நல்லது சொல்லவரும் கவியே
    நாலுக்கும் தயாராய் இரும்

    ReplyDelete
  12. காலம் சொல்லி ஞாலமும் சொல்லும் கவிதை அற்புதம்

    ReplyDelete
  13. //எதிர்கால சந்ததி நிலமைஎன்ன-அதை
    எண்ணாமல் இன்றுள்ளோர் செய்வதென்ன //

    கோடை வெப்பத்தை தணித்துக்கொள்ள இளநீர் போன்றதோர் குளுமையான கவிதை

    ReplyDelete
  14. விஞ்ஞானம் என்று சொல்லிக்கொண்டு இயற்கையை நோண்டிக்கொண்டே இருக்கிறார்களே.இயற்கைக்கும் கோபம் வரும்தானே.நல்லதொரு கவிதை ஐயா !

    ReplyDelete
  15. அருமையான கவிதை ஐயா....மிக்க நன்றி
    பகிர்வுக்கு...............

    ReplyDelete
  16. சிந்தனையை தூண்டும் கவிதை..

    ReplyDelete
  17. என் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

    Reverie

    ReplyDelete
  18. ''..எதுவாக இருந்தாலும் காலம்சொல்லும்-இதன்
    எதிர்வினை யாதென ஞாலம்சொல்லும் ...'
    ஞாலம் தான் காலதிற்குக் காலம் செல்லிக் கொண்டுள்ளதே.
    வேதா. இலங்காதிலகம்.
    http://www.kovaikkavi.wordpress.com

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...