Sunday, December 18, 2011

சங்கப் பதிவு, இரண்டாம் கட்ட நடவடிக்கை!


அன்புடையீர்
              வணக்கம்!
இன்று இப் பதிவில் சங்கத்தின் இரண்டாவதுக் கட்ட
நடவடிக்கைப் பற்றிய விவரங்கள்!
               தமிழ்நாடு மொத்தம் முப்பத்திரண்டு
 மாவட்டங்களாகும்
              உடன்
           
மாவட்டங்கள் செய்ய வேண்டிய
பணிகள்!
ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒருவர்
முன் நின்று அம் மாவட்டத்திலுள்ள வலைப்
பதிவர்களைச் சங்கத்தின் உறுப்பினர்களாக சேர்க்க
வேண்டும்
 
          பிறகு, உறுப்பினர் அனைவரும் சேர்ந்து
அம் மாவட்டத்திற்குரிய, தலைவர், செயலாளர்,
பொருளார், துணைத்தலைவர், துணைச் செயலர்
ஆகியோரைத் தேர்வு செய்ய வேண்டும்
        
இவர்களே ஆட்சியாளர் ஆவர்
 இவர்கள் தவிர மேலும் செயற்குழு உறுப்பினர்களாக
ஐந்து அல்லது ஏழு பேரைத் தேர்வு செய்யவேண்டும்
     
ஆக இந்த,  பத்து அல்லது பன்னிரண்டுபேர்
சேர்ந்த குழுவே  அம் மாவட்டத்திற்குரிய
செயற்குழு ஆகும்
        
மொத்த உறுப்பினர் அனைவரும் அம்
மாவட்டத்தின் பொதுக்குழு உறுப்பினர் ஆவார்
       
எனவே, இவ்வாறு ஒவ்வொரு மாவட்டத்திலும்
உள்ளவர்கள், செயல் பட்டு தங்கள் மாவட்டத்தின்
ஆட்சியாளர்கள்குழு, செயற்குழு, பொதுக்குழு ஆகிய
வற்றை அமைத்துக் கொள்ள வேண்டும்.

     அடுத்தது மாநிலக்கழகம்!
   -----------------------------------------------------
மாநிலச் செயற்குழு-
  
         மாவட்டந்தோறும் தேர்வு செய்யப்பட்ட,
ஆட்சிக் குழுவில் உள்ள, தலைவர் செயலர், பொருளர்
ஆகிய மூவரும், (மொத்தம் 96) சேர்ந்ததே மாநிலச் செயற்குழு
ஆகும்.

மாநிலப் பொதுக்குழு-
          
மாவட்டத்தில் தேர்வு செய்யப் பட்ட செயுற்குழு
உறுப்பினர்களை  சேர்ந்த குழுவே மாநிலப் பொதுக்குழு ஆகும்
 
பிறகு தமிழகத்தில் மையப் பகுதியில், அனைவரும் கலந்துக்
கொள்ள, வசதியான பொது இடத்தில் மாநிலப்பொதுக்குழுவைக்
கூட்ட வேண்டும்,
       
அக் கூட்டத்தில்  மாநிலத் தலைவர், மாநிலச் செயலர்
மாநிலப் பொருளர், ஆகியோரும், மேலும் தேவைக்கு ஏற்ப
துணைத் தலைவர்கள், துணைச் செயலர்கள் ஆகிய ஆட்சிக்
குழுவைத் தேர்வு செய்ய வேண்டும்
     
மேலும், சங்கத்திற்குரிய சட்டதிட்டங்கள்,
நோக்கம், வெளிநாடுகளில் உள்ள தமிழ் வலைப்
பதிவர்களை எம்முறையில் சேர்த்துக் கொள்வது
என்பவைப் பற்றி எல்லாம் மாநிலப் பொதுக் குழுவில்
ஆய்வு செய்யவேண்டும்.
       
மாவட்டச் சங்கங்கள் மேற்கண்டவாறு
செயல்பட்டு தற்போது பதிவு செய்யப்பட உள்ள
தலைமைச் சங்கத்திற்கு அறிக்கையை அனுப்பப் வேண்டும்
     
         அவர்கள் தான் முறையா மாநிலப் பொதுக்
குழுவைக் கூட்டி தேர்தலை நடத்துவார்கள்

         இவையே அடிப்படைப் பொதுவான
நடைமுறை விதிகளாகும்
          
பிற பின்னர்
  
ஐயமிருப்பின் கீழ் வரும் என் தொலைபேசியில்
             தொடர்பு கொள்ளவும்
தொலை-24801690        அலைபேசி-90944766822
               அன்பன்
        புலவர் சா இராமாநுசம் 


    
     

19 comments :

  1. நல்ல சிந்தனையை முன்வைத்திருக்கிறீர்கள் புலவரே

    ReplyDelete
  2. அருமையான யோசனை, நானும் ரெடி புலவரே...

    ReplyDelete
  3. வணக்கம் ஐயா..

    நல்லதொரு விளக்க யோசனை..

    முன்னெடுத்துச் செல்ல வேண்டிய விஷயங்கள்..

    ReplyDelete
  4. நல்லது புலவரே.
    அப்படியே செய்யுங்கள்.

    ReplyDelete
  5. நன்று. தொடர்வோம்...

    ReplyDelete
  6. ஆஹா, அருமையான அஸ்திவாரத்தின் அற்புதமான வரைவுப்படம்! வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள் ஜயா

    ReplyDelete
  8. வணக்கம் ஐயா,
    சௌக்கியமா?
    காத்திரமான ஒரு பதிவர் குழுமத்தைக் கட்டியெழுப்பிட அருமையான வழியினை முன் வைக்கிறீங்க.

    தமிழகத்திற்கு வெளியே அண்டை நாடுகளில் உள்ள பதிவர்களிற்கு தங்களிடம் ஏதும் ஆலோசனைகள் இருக்கின்றனவா?

    ReplyDelete
  9. அமர்க்களமான தொடக்கம்
    தொய்வின்றி தொடரட்டும் அய்யா

    ReplyDelete
  10. அருமையான தொடக்கம் ஐயா, விரைவில் ஆவன படுத்த முயற்சிப்போம்.... நன்றி

    ReplyDelete
  11. மிக அருமையான திட்டத்தை முன் வைத்திருக்கிறீர்கள்!

    ReplyDelete
  12. அப்படியே செய்வோம்..

    ReplyDelete
  13. ஆஹா சங்கம் மற்றும் திட்டங்கள் களைகட்டுகிறதே. :)

    ReplyDelete
  14. அய்யா!
    இது சம்பந்தமாக இன்று நான் ஒரு கவிதை எழுதி இருக்கிறேன். நன்றி.

    http://duraidaniel.blogspot.com/2011/12/blog-post_19.html

    ReplyDelete
  15. நல்லதொரு முயற்சி .
    திருவினையாகட்டும்.

    ReplyDelete
  16. இந்த சங்கத்தில் வலைபூ பதிவர்கள் மட்டும் தான் இடம் பெற முடியுமா அல்லது கீச்சு வலை தள பதிவர்களும் இனைய முடியுமா என்ற சந்தேகம் எழுந்தாலும், முதலில் ஏதாவது செய்ய வேண்டும் என்ற பர பரப்பு தொற்றிக் கொண்டது... என் மாவட்டத்தில் முன்முயர்ச்சியை நான் தொடங்குகிறேன் அய்யா

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...