Monday, May 7, 2012

என்னவள் மறைந்ததும் இந்நாளே


ஓடின மூன்று ஆண்டுகளே-என்
  உயிரென வாழ்ந்து மாண்டவளே!
தேடியே காணும் இடமன்றே-அன்புத்
   தேவதை மறைந்த இடமொன்றே!
வாடிய மலராய் நானாக –அதன்
   வாசனை, அவளோ விண்னேக!
பாடிய பாடல் அன்றிங்கே-இன்று
   படைத்தேன் படித்திட நீரிங்கே!

தன்னலம் காணாத் தகவுடையாள்-எதிலும்
       தனக்கென நற்குணம் மிகவுடையாள்!
 இன்னவர் இனியவர் பாராமல்-உதவ
        எவருக்கும் மறுப்பு கூறாமல்!
 என்னவள் இவளே செய்திடுவாள்-வரும்
       ஏழைக்கே மருந்தும் தந்திடுவாள்!
 அன்னவள் மருத்துவ மாமணியே-புகழ்
       அறிந்திட இயலாப் பாவழியே!


என்றும் அன்புடன் இருப்பாயா
என்னை விட்டுப் பிரிவாயா!
அன்று உன்னைக் கேட்டேனே
அதற்கு என்ன சொன்னாய்நீ!
நன்று அன்று இக்கேள்வி
நமது காதல் பெருவேள்வி!
என்று சொன்ன தேன்கனியே
எங்கே போனாய் நீதனியே!

கட்டிய கணவன் கண்முன்னே
காலன் அழைக்க என்கண்ணே!
விட்டுப் போனது சரிதானா
விதியே என்பது இதுதானா!
மெட்டியைக் காலில் நான்போட
மெல்லியப் புன்னகை இதழோட!
தொட்டுத் தாலி கட்டியன்
துடிக்க வெடிக்கப் போனாயே!

பட்டு மேனியில் தீவைக்க
பதறும் நெஞ்சில் முள்தைக்க!
கொட்டும் தேளாய் கணந்தோறும்
கொட்ட விடமாய் மனமேறு்ம்!
எவ்வண் இனிமேல் வாழ்வதடி
என்று உன்னைக காண்பதடி
செவ்வண் வாழ்ந்தோம் ஒன்றாக
சென்றது ஏனோத் தனியாக!

எங்கே இருக்கிறாய் சொல்லிவிடு
என்னையும அழைத்துச் சென்றுவிடு!
அங்கே ஆகிலும் ஒன்றாக
அன்புடன் வாழ்வோம் நன்றாக!
இங்கே நானும் தனியாக
இருத்தல் என்பது இனியாக!
பங்கே என்னில் சரிபாதி
பரமன் காட்டிய வழிநீதி!
செய்வாயா--?

                       புலவர் சா இராமாநுசம் 


41 comments :

  1. தேகமெங்கும் சோகம் வழிந்தோட புனைந்த இனிமையான கவிதை ..!

    ReplyDelete
  2. புலவர் அய்யா அவர்களே! உங்களை ஆற்றுப் படுத்தும் வயது எனக்கில்லை. உங்கள் மனைவியின் நினைவு நாளில் அன்னாரது ஆன்மாவிற்கு எனது நினைவஞ்சலி!

    “ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நானறிவேன்
    உன் காலடி ஓசையிலே உன் காதலை நானறிவேன்
    இந்த மானிடர் காதலெல்லாம் - ஒரு
    மரணத்தில் மாறிவிடும் அந்த
    மலர்களின் வாசமெல்லாம் - ஒரு
    மாலைக்குள் வாடிவிடும் - நம்
    காதலின் தீபம் மட்டும் - எந்த
    நாளிலும் கூட வரும்
    இந்தக் காற்றினில் நான் கலந்தே - உன்
    கண்களைத் தழுவுகின்றேன் - இந்த
    ஆற்றினில் ஓடுகின்றேன் - உன்
    ஆடையில் ஆடுகின்றேன் - நான்
    போகின்ற பாதையெல்லாம் - உன்
    பூ முகம் காணுகின்றேன் “
    - பாடல்: கண்ணதாசன் படம்: வல்லவனுக்கு வல்லவன்

    ReplyDelete
  3. ஐயா..கவிதை வாசித்தேன் மனசு கனமானது..உங்கள் அன்பை,பாசத்தை,காதலை,ஏக்கத்தை,சோகத்தை,பிரிவை,ஆற்றாமையை அனைத்தையும் கவிதை வெளிக்காட்டியது..

    ReplyDelete
  4. உள்ளம் உருகுதய்யா உங்கள் கவிதை காண்கையிலே!
    வெள்ளப் பெருக்கினைப்போல் கண்ணீர் கண்களிலே .

    ReplyDelete
  5. துனைவியின் பிரிவை சோகம் ததும்ப சொல்லும் உணர்வுக்கவிதை. ஆண்டுக்ள் போனாலும் அன்பு நினைவு நீங்காது.

    ReplyDelete
  6. தன்னில் பாதியாய் வாழ்ந்திட்டவரை எண்ணி நீங்கள் புனைந்த பா மனதைத் தொட்டது. எத்தனை ஆண்டுகள் ஆனால்தான் என்ன... இந்த வேதனை தீராதது... நினைவுகள் விலகாதது... என்பதே நிஜம்!

    ReplyDelete
  7. நினைவில் இன்னும் உங்களுடன் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறாள், அம்மா.

    ReplyDelete
  8. வரிகளில் சோகம்.... அந்த நினைவுகள்.....இழப்புக்கு ஈடு??? மனம் கனமாக்கியது

    ReplyDelete
  9. ஐயா
    வாசித்தேன் வார்த்தைகள் இல்லை
    மனம் கனத்த மௌனத்தை சமர்ப்பிக்கிறேன்

    ReplyDelete
  10. //வாடிய மலராய் நானாக –அதன்
    வாசனை, அவளோ விண்னேக! arumaiyaana vaarthai yaakkam. ammavoda inmai ungala evlo vattuthunu enga kanneril theriyuthu

    ReplyDelete
  11. வரலாற்று சுவடுகள் said...

    அன்பான வரவுக்கும் ஆறுதலான வாழத்துக்கும்
    என்றும் நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  12. தி.தமிழ் இளங்கோ said...

    அன்பான வரவுக்கும் ஆறுதலான வாழத்துக்கும்
    என்றும் நன்றி!
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  13. மதுமதி said...

    அன்பான வரவுக்கும் ஆறுதலான வாழ்த்துக்கும்
    என்றும் நன்றி!
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  14. T.N.MURALIDHARAN said...



    அன்பான வரவுக்கும் ஆறுதலான வாழ்த்துக்கும்
    என்றும் நன்றி!
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  15. தனிமரம்said...

    அன்பான வரவுக்கும் ஆறுதலான வாழ்த்துக்கும்
    என்றும் நன்றி!
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  16. கணேஷ் said...

    அன்பான வரவுக்கும் ஆறுதலான வாழ்த்துக்கும்
    என்றும் நன்றி!
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  17. சத்ரியன்said...

    அன்பான வரவுக்கும் ஆறுதலான வாழ்த்துக்கும்
    என்றும் நன்றி!
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  18. மனசாட்சி™ said...


    அன்பான வரவுக்கும் ஆறுதலான வாழ்த்துக்கும்
    என்றும் நன்றி!
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  19. செய்தாலிsaid...


    அன்பான வரவுக்கும் ஆறுதலான வாழ்த்துக்கும்
    என்றும் நன்றி!
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  20. GowRami Ramanujam Solaimalai said...

    அன்பான வரவுக்கும் ஆறுதலான வாழ்த்துக்கும்
    என்றும் நன்றி!
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  21. மனதை உருக்கும் வகையில் உள்ளது....எவ்வாறிருப்பினும் இவ்வுலக நிகழ்வுகள் யாவும் இறைவனால் நிச்சயிக்கப்பட்டவை என்பதனையுணர்ந்து சாந்தி பெறுக...

    ReplyDelete
  22. koodal bala said...

    அன்பான வரவுக்கும் ஆறுதலான வாழ்த்துக்கும்
    என்றும் நன்றி!
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  23. AROUNA SELVAME said...


    அன்பான வரவுக்கும் ஆறுதலான வாழ்த்துக்கும்
    என்றும் நன்றி!
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  24. \\வாடிய மலராய் நானாக –அதன்
    வாசனை, அவளோ விண்ணேக!\\

    இந்த இரு வரிகளுக்குள் தங்கள் உணர்வு மொத்தமும் அடங்கிவிட்டது. காதல் மனைவியைப் பிரிந்து வாடும் தங்களுக்குத் தமிழே தக்க துணையாம். ஆறுதலும் தேறுதலும் கொண்டு இன்னுமின்னும் பல இனிய பாக்கள் படைத்து துயர் மறக்க வேண்டுகிறேன்.

    ReplyDelete
  25. என்ன சொல்வதென்றே தெரியவில்லை.எப்படிப்பட்ட ஒரு இல்லற வாழ்க்கை அமைந்திருக்க வேண்டும் என்பதை என்னால் உணர முடிகிறது.பிறப்பையும் இறப்பையும் முடிவு செய்பவன் அந்த நாராயணன்தானே?அவனை நினையுங்கள்.ஆறுதல் தருவான்.

    ReplyDelete
  26. கீதமஞ்சரி said...

    அன்பான வரவுக்கும் ஆறுதலான வாழ்த்துக்கும்
    என்றும் நன்றி!
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  27. சென்னை பித்தன் said...


    அன்பான வரவுக்கும் ஆறுதலான வாழ்த்துக்கும்
    என்றும் நன்றி!
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  28. பிரிவுத் துயரின் ஆழம் எம்மைப் பதறச் செய்து போகிறது
    ஈடு செய்ய இயலாத இழப்புக்கு
    எப்படி ஆறுதல் வார்த்தைச் சொல்வது எனப் புரியவில்லை
    இன்னொரு வகையில்
    இருப்பவர்களின் அருமையை உணரும்
    அறிவையும் தூண்டிப் போகிறது தங்கள் பதிவு
    மனம் பாதித்த பதிவு

    ReplyDelete
  29. ஐயா வரிகளின் வலி உணர்ந்தேன் ஆறுதல் சொல்லும் வயதும் இல்லை .எங்களுக்கு வழிகாட்டியாகவும் , ஆசிர்வாதமாகவும் தங்கள் வரிகள் வளம் வர தாங்கள் எல்லா நலமும் பெற்று வாழ வேண்டுகிறேன் .

    ReplyDelete
  30. நினைவுகள் மறைவதில்லை.

    எனது அஞ்சலிகள் அய்யா.

    ReplyDelete
  31. Ramani said...


    அன்பான வரவுக்கும் ஆறுதலான வாழ்த்துக்கும்
    என்றும் நன்றி!
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  32. சசிகலா said...


    அன்பான வரவுக்கும் ஆறுதலான வாழ்த்துக்கும்
    என்றும் நன்றி!
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  33. ராஜ நடராஜன்said...


    அன்பான வரவுக்கும் ஆறுதலான வாழ்த்துக்கும்
    என்றும் நன்றி!
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  34. இளமையில் துணையின் அருகாமை உடல் சார்ந்தது. ஆனால், முதுமையில் துணையின் அருகாமை உடலும், உள்ளமும் சார்ந்தது. முதுமையில் உடல் சார்ந்தது என்பது காமத்திற்கு அல்ல, உடல் நலத்திற்கு. எனவே இளமையில் காதலை விட, முதுமையில் வரும் காதலே சிறந்து. அந்த காதலை இழந்து வாடும் உங்களுக்கு ஆறுதலை இறைவந்தான் அளிக்க வேணும்.

    ReplyDelete
  35. இந்த பதிவிற்கு என்னால், ஓட்டளிக்க்க இயலாது. மன்னிக்கவும் ஐயா.

    ReplyDelete
  36. ஐயா, டாக்டர் இறந்து மூன்றாடுகள் ஓடிவிட்டனவா?
    ஈடு செய்ய முடியா இழப்பென்றாலும், வேதனையைத் தாங்கும் மனவலிமையை உங்களுக்குத் தர வேண்டுகிறேன்.
    என்றும் அன்புடன்
    (முன்னாள் ரங்கராஜபுர வாசி) பாஸ்டன் ஸ்ரீராம்

    ReplyDelete
  37. துணையிழப்பின் வேதனை
    பிணைக்கப்பட்டது.
    இணையில்லா இறை, மன
    அணைவாக அமைதி தரட்டும்.
    சாந்தி....
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  38. உங்கள் அன்புக்கு முன்னால் வார்த்தைகளுக்கு இடமில்லை ஐயா.வணங்கிப் போகிறேன் !

    ReplyDelete
  39. நெகிழ வைத்து விட்டது கவிதை வரிகள்

    ReplyDelete
  40. உங்கள் கவிதை இனிமை

    வாழ்த்துகள்

    உங்கள் பதிவுகளை DailylLib ல் இணைத்து பயன் பெறுங்கள். DailyLib செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்

    தமிழ்.DailyLib

    we can get more traffic, exposure and hits for you

    To link to Tamil DailyLib or To get the Vote Button
    தமிழ் DailyLib Vote Button

    உங்கள் பதிவுகளை இணைத்து பயன் பெறுங்கள்

    நன்றி
    தமிழ்.DailyLib

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...