Wednesday, January 2, 2013

வடநாடுச் சென்றும் வாளாய் திரும்பிட





வடநாடுச்  சென்றும்  வாளாய்  திரும்பிட
கொடநாடும்  சென்றாராம்  இன்றும் திடமான
திட்டமின்றி!  மக்கள்  தினந்தோறும்  தேம்பியழ
வெட்டும்மின் வெட்டே விளம்பு

ஆள்வோர்க்கும்  துன்புண்டா ஆண்டோர்க்கும்  துன்புண்டா
மாள்வார்கள்  மக்கள்தான்  மாறாதா நாள்போதல்
சொல்லும்  தரமல்ல  சோகம்தான்  என்றுமினி
கொல்லும் நிலைதானே  கூறு

இப்படியே  போனாலே  என்செய்வோம்  சொல்லுங்கள்
ஒப்பிடவே  ஏதுண்டா? உண்மையிலே செப்பிடவே
பஞ்சம்  பசிப்பிணி   பரவிடுமே  ஊரெங்கும்
நெஞ்சம்  பதற  நிதம்

எங்கும்போர்  என்றேதான்  ஏங்கும்  நிலைதானே
பொங்கும் செயல்கண்டே  புண்படுமே தங்கமென
வாங்கும்  பொருளெல்லாம்  வானுயர  ஏறவிலை
தாங்கும்  நிலையுண்டா  தான்!

                    புலவர்  சா இராமாநுசம்

17 comments :

  1. இனியாவது மாறட்டும் இருட்டிலிந்து இந்த தமிழகம் 2013

    ReplyDelete
  2. எங்கும்போர் என்றேதான் ஏங்கும் நிலைதானே
    பொங்கும் செயல்கண்டே புண்படுமே – தங்கமென
    வாங்கும் பொருளெல்லாம் வானுயர ஏறவிலை
    தாங்கும் நிலையுண்டா தான்!

    துன்பப் பகிர்வு..

    ReplyDelete
  3. இந்த ஆண்டாவது ஒளி மிக்கதாக அமையுமா என்ற எதிர்பார்ப்பு தான் எல்லாரது மனங்களிலும். ஆதங்கங்களின் குரலாய் ஒலித்திட்ட இந்தக் கவிதை மனதில் தைத்தது.

    ReplyDelete
  4. என்ன செய்யமுடியும் நம்மால்? ஆதங்கத்தை வெளிப்படுத்துவதை தவிர! கோபத்தை காண்பிக்க காத்திருக்கவேண்டியதுதான். எல்லோருடைய எண்ணத்தையும் கவிதையில் வெளிப்படுத்தியமைக்கு நன்றி!

    ReplyDelete
  5. அதென்ன செக்ஷனுங்க, 368 ஏ யா. அதுக்குள்ள மறந்து போச்சு பாருங்க.

    ReplyDelete
    Replies
    1. தாங்கள் கேட்பது எதுவென்று புரியவில்லை ஐயா!

      மிக்க நன்றி!

      Delete
  6. பிறந்திருக்கும் புத்தாண்டு
    இதற்கொரு தீர்வைத் தருமா
    என்பதை எதிர்நோக்கியே உள்ளோம் பெருந்தகையே....

    ReplyDelete
  7. துப்பிலா மாந்தரிடம் ஒப்பிலா ஆட்சிதனை வழங்கிட்ட மதியிலா மாந்தரினம்! தப்பிலை இதற்கொரு விடியல் விரைவில் வரும்! அருமையான படைப்பு ஐயா! நன்றி!

    ReplyDelete
  8. துயர் நிலையை சொன்னாலும் வெண்பாவின் அழகே அழகு

    ReplyDelete
  9. கருத்து அருமையாக உள்ளது புலவர் ஐயா.

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...