Wednesday, September 4, 2013

பதிவர் சந்திப்பும் என்கருத்தும் அறிவிப்பும்



அன்பு  உறவுகளே!
              வணக்கம்!
        பதிவர்  சந்திப்பு  விழா நடந்து  இரண்டு நாட்கள்  ஓடிவிட்டன!  விழா மிகவும்  சிறப்பாக  நடை பெற்றது என்பதை  நேரில்  கலந்து  கொண்டவர்களும்  .கண்டு  வந்தோர்  வலைவழி  பதிவுகளாக  பலரும் எழுதியதன்  வாயிலாகவும்  அறிந்திருப்பீர்கள்!

       இதற்கான  ஆயத்தப் பணிகளை  கடந்த  இரண்டு  திங்களாக திட்டமிட்டு, ஒவ்வொரு  ஞாயிற்றுக்  கிழமையும்  கூடி விவாதித்து,
ஒட்டுமொத்த  விழாவின் அனைத்துக்  குழுவினரையும் அமைத்தும், பணியாற்றிய சென்னை  நகர இளைஞர்  படையின் ஒற்றுமையும் உயர்ந்த  பண்பும்,வெறும்  பாராட்டத் தக்கது  மட்டுமல்ல! என்றென்றும் போற்றத் தக்கது என்றால்  அது  மிகையல்ல!

       எதிர்  பலன்  நோக்காது , கைமாறு  கருதாது ,கடமை உணர்வோடு, கட்டுப்  பாடாக கண்ணியத்தோடு   அங்கும் , இங்கும் ஓடி விழாவன்று   அவர்கள் பணியாற்றிதைக்  கண்டவர்  பாராட்டினர் அதனைக் கேட்டு  நான் உள்ளம்  பூரித்துப்  போனேன்!

       இப்படை  தோற்கின்  எப்படை வெற்றி கொள்ளும்  என்ற கேள்விக்கு விடையாக  நின்ற  என் அன்பின்  இனிய  தம்பிமார்களின் கரங்களைப்  பற்றி  மூத்தவன் (வயதில்) என்ற முறையில் என்நன்றியினை  தெரிவித்துக்  கொள்வதோடு  அவர்கள்  வாழ்வாங்கு வாழ என் வாழ்த்தினையும்   தெரிவித்துக்  கொள்கிறேன்

      விழா தொய்வின்றி  நடைபெற  உள்நாட்டிலும், வெளி நாட்டிலும்  இருந்து  நிதி  அளித்து  உதவிய  அனைவருக்கும்  நாங்கள்  நன்றி  தெரிவிக்க  கடமைப்  பட்டுள்ளோம்!
   
           நன்றி!             நன்றி!               நன்றி! 

     மேலும்,  விழா  சிறப்பாக  நடைபெற  நாட்டின் பல்வேறு  இடங்களில் இருந்தும்  போக்கு வரத்து  போன்ற  தொல்லைகளை எல்லாம் கடந்தும் திரளாக வந்து  கூடிய  பதிவர்கள்  அனைவருக்கும்  எங்கள்  வணக்கத்தையும்  வாழ்த்தையும்   தெரிவித்துக்  கொள்கிறோம்

     வாழ்க பதிவர் !             வளர்க அவர்தம்  ஒற்றுமை!

                          புலவர்  சா  இராமாநுசம்

13 comments :

  1. தங்கள் தலைமையின் வழிகாட்டுதலில்
    இந்த இரண்டாம் பதிவர் சந்திப்பும்
    மிகச் சிறப்பாய் நடைபெற்றது
    தங்களுக்கும் சென்னைப் பதிவர்கள் அனைவருக்கும்
    எங்கள் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  2. எதிர் பலன் நோக்காது , கைமாறு கருதாது ,கடமை உணர்வோடு, கட்டுப் பாடாக கண்ணியத்தோடு அங்கும் , இங்கும் ஓடி விழாவன்று அவர்கள் பணியாற்றிதைக் கண்டவர் பாராட்டினர் ...
    தங்களால் ஓடி ஆடி எந்த பணியும் செய்ய முடியவில்லை என்று தாங்கள் வருந்தியதையும் நான் நேரில் பார்த்து நெகிழ்ந்து போனேன் ஐயா.
    தங்களுக்கும் விழா குழுவினர் ஒவ்வொருவருக்கும் எனது வணக்கமும் நன்றியும்.

    ReplyDelete
  3. விழா சிறப்பாக இருந்தது! தங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி! நன்றி!

    ReplyDelete
  4. தலைமை தாங்கி வழிநடத்திய நீங்களும் பாராட்டுக்குரியவர்தாமே!

    ReplyDelete
  5. விழா சிறப்புற நடைபெற்றமை குறித்து மிக்க மகிழ்ச்சி ஐயா. இதன் பின்னணியில் உழைத்த தங்களுக்கும், மற்றப் பதிவர்களுக்கும் அன்பான நன்றி.

    ReplyDelete
  6. உங்கள் தலைமையும் வழிகாட்டலும் விழா சிறப்புற அமையக் காரணமாக இருந்தது. மிகக் மகிழ்ச்சி

    ReplyDelete
  7. எல்லோரின் சார்பாக முதல் நன்றியை உங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்

    ReplyDelete

  8. மிக்க நன்றி அய்யா உங்களின் வழிகாட்டுதலுக்கு.....

    ReplyDelete
  9. இவ் விழாவிற்காக உழைத்த அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். நன்றி..

    ReplyDelete
  10. அனைவருக்கும் வாழ்த்தை தெரிவித்துக் கொள்கிறேன்

    ReplyDelete
  11. பதிவர் சந்திப்பில் உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி ஐயா !

    ReplyDelete
  12. “இதனை இதனான் இவன்முடிக்கும் என்றாய்ந்து,
    அதனை அவன்கண் விடல்” என்பதற்கேற்ப ஒவ்வொருவரின் இயல்பு, மற்றும் திறனறிந்து தாங்கள் பணியாற்றுவதை ஏற்கெனவே நமது தமிழாசிரியர் கழக மாநிலத்தலைவராகத் தாங்கள் இருந்தபோதே நான் அறிவேன். இன்றும் பணிதொடர்வதைப் பதிவர் விழாவில் கண்டு பெரிதும் மகிழ்ந்தேன். தங்களுக்கு அடுத்த தலைமுறை நான். எனக்கடுத்த தலைமுறை சிறப்பாகப் பணியாற்றும்போது நானும் பெரிதும் மகிழ்கிறேன். எண்ணிய எண்ணியாங்கு செய்வோம்.

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...