Thursday, January 15, 2015

தைமாத முதல்நாளே புத்தாண் டாகும்!தைமாத முதல்நாளே புத்தாண் டாகும்-உண்மை!
      தமிழருக்கு அணுவேணும் ஐயம் வேண்டாம்
பொய்யாக இதுவரை எண்ணி வந்தோம்-மேலும்
      புரியாமல் வாழ்த்தினைச் சொல்லித் தந்தோம்
 ஐயாவே அம்மாவே மாற்றிக் கொள்ளோம்-இனி
      அனைவர்க்கும் இதையேதான் எடுத்துச் சொல்வோம்
 மெய்யாக எதுவென்றே உணர்ந்துக் கொண்டோம்-இம்
       மேதினி உணர்ந்திட இங்கே  விண்டோம்

 காட்டைத் திருத்தியே பயிரு மிட்டான்-நெல்
        கதிர்கண்டு நம்முடை உயிரை மீட்டான்
 வீட்டை மகிழ்ச்சியில் ஆழ்தி விட்டான்-பயிர்
       விளைந்திட அறுவடைப்   பொங்க லிட்டான்
 மாட்டுக்கும் பொங்கலே வைத்தி டுவான்-நல்
       மனித நேயத்துக்கே வித்தி டுவான்
 பாட்டுக்கே அன்னவன் உரிய  வனாம்-தமிழ்ப்
       பண்பாட்டின் சின்னாய் திகழ்ப வனாம்!
      
 உதிக்கின்ற கதிரவன் இறைவன் என்றே-அவன்
      உணர்ந்தவன் அதனாலே பொங்க லன்றே
 துதிக்கின்றான் வாசலில் பொங்கல் இட்டே-இது
      தொடர்கதை அல்லவா அன்று தொட்டே
 கதிகெட்டு போவோமே உழவன் இன்றேல்-அவன்
      கைகள் முடங்கிடின்  எதுவு மின்றே
 மதிகெட்டு இனிமேலும் உழவன் தன்னை-அரசு
       மதிக்காமல் மிதித்தாலே நிலமை என்னை?

 புயலாக மழையாக இயற்கை சீற்றம்-வந்துப்
      போவதால் அன்னவன் வாழ்வில் ஏற்றம்
 இயலாது! இயலாது !கண்டோ  மன்றே-அந்த
        ஏழையும் உயர்வதும் உண்டோ? நன்றோ?
  முயலாது பதவியின் சுகமே காண்பார்-உழவன்
       முன்னேற உறுதியா நெஞ்சில் பூண்பார்
  பயிலாதப் பெரும்பான்மை  மக்க ளய்யா-உடன்
        பரிவோடு ஏதேனும் செய்யு மய்யா!

        அன்பின் வழிவந்த வலையுலக நெஞ்சங்களே!
         உங்கள் அனைவருக்கும் பொங்கல் திருநாளாம்
         நம், தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!! நன்றி!

                                 புலவர் சா இராமாநுசம்

37 comments :

 1. உண்மையை மக்களுக்கு புரியும்படி சொன்ன புலவர் ஐயாவிற்கு நன்றி! பழைய பழக்கங்களில் இருந்து வெளிவருவது எளிதல்ல. நம் மக்கள் நாளடைவில் தை முதல் நாளை புத்தாண்டாக கொண்டாடுவார்கள்--இது உறுதி!

  தமிழ்மணம் +1

  ReplyDelete
 2. ஏழையும் உயர்வதும் உண்டோ? நன்றோ?
  முயலாது பதவியின் சுகமே காண்பார்-உழவன்
  முன்னேற உறுதியா நெஞ்சில் பூண்பார்
  பயிலாதப் பெரும்பான்மை மக்க ளய்யா-உடன்
  பரிவோடு ஏதேனும் செய்யு மய்யா! -- நாட்டின் முதுகெலும்பு.

  பொங்கல் வாழ்த்துக்கள் ஐயா .

  ReplyDelete
 3. தை பிறந்தாச்சு
  உலகெங்கும் தமிழ் வாழ
  உலகெங்கும் தமிழர் உலாவி வர
  வழி பிறந்தாச்சென வாழ்த்துகிறேன்!

  ReplyDelete
 4. இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் நல் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 5. புலவர் அய்யா அவர்களுக்கு எனது உளங்கனிந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்!

  த.ம.2

  ReplyDelete
 6. # ஐயாவே அம்மாவே மாற்றிக் கொள்ளோம்-இனி
  அனைவர்க்கும் இதையேதான் எடுத்துச் சொல்வோம்#
  சரிதான் ,அவங்க அரசியலை அவங்க நடத்திக்கட்டும்:)
  த ம +1

  ReplyDelete
 7. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும், சுற்றத்தாருக்கும் எங்கள் மனமார்ந்த இனிய தமிழர்/உழவர் திருநாள் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 8. கவிதை அருமை ஐயா
  இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 9. அய்யா என இனிய பொங்கல் திருநாள் நல் வாழ்த்துக்கள்.

  புலவரே நீங்க வேணுமின்னா என்னிக்கி வேணா புத்தாண்டை கொண்டாடிட்டு போங்க, அத விட்டு ஏன் மற்றவர் மேல் திணிக்கீறீங்க. உலக தமிழர்களுக்கு சித்திரை முதல் நாளே தமிழ் புத்தாண்டு அதை யாராலும் மாற்ற முடியாது.

  ReplyDelete
  Replies
  1. Mr. Rajaraman: It is the other way around, for your information..!
   தமிழர்கள் மீது வலிந்து திணித்த [பஞ்சாங்க] சித்திரை புத்தாண்டை மாற்றி உண்மையான தை தமிழ் புத்தாண்டிற்கு மாற்றுகிறோம். தவறு செய்தது நீங்கள்; அதை நாங்கள் இப்போ திருத்துவது தவறா? இது என்னப்பா நியாயம்? யாருமே நீங்கள் செய்த தவறைகூட... கேள்வி கூட கேட்கக்கூடாதா?

   Delete
  2. திரு நம்பள்கி அவர்களே என் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

   உங்களை போன்றவர்களுக்கு எங்கும் எதிலும் பிராமணர்களை இழுத்து விடுவது தான் நீங்கள் முற்போக்கானவர்கள் என்று காட்டிக்கொள்ளும் முகமூடி.

   அடுத்து நான் பிராமணர் இல்லை. சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டு என்பது தான் கால காலமாக தொன்று தொட்டு தமிழ் கூறும் நல்லுலகில் கடைபிடிக்கப்பட்டு வருவது, இது ஒன்றும் பிராமணர்களால் திணிக்கப்பட்டது அல்ல. மாறாக தற்போது நவீன பிராமணரால் (தமிழகத்தின் சாபக்கேடு) செய்யப்பட்டது தான் திணிப்பு. அடுத்து இதை அவர் குடும்பத்தினரே கூட கடைபிடிப்பனரா என்பதே சந்தேகம்.

   Delete
  3. நான் உங்களை பிராமணர் என்று என்று சொன்னேன்?
   நீங்கள் என்றால் தவறாக புத்தாண்டு குறித்த பழைவாதிகள் என்று அர்த்தம்.

   விவாதம் செய்ய முடியவில்லை என்றால் இருக்கவே இருக்கு--பிராமணர் என்பதால் அப்படி சொல்கிறீர்கள்;; இப்படி சொல்கிறீர்கள்; போய் புள்ள குட்டியை படிக்க வையுங்கள் என்று இப்படி சொல்லி விவதத்தை திசை திருப்புவது. நீங்கள் சொல்லும் நவீன பிராமணர் இதை கடை பிடித்தால் என்ன இல்லாவிட்டால் என்ன. தமிழ் அறிஞக்ர்கள் பல கூடி, இன்று தான் புத்தாண்டு என்று சொல்கிறறர்கள். பஞ்சாங்கள் சொல்வது சித்திரை. நீங்கள் எதை வேணா கொண்டாடுங்க--அனால், இன்று தான் புதிய புத்தாண்டு. இப்பவே பொங்கல் போய்--சங்கராந்தி வந்தாச்சு!

   Delete
  4. இதை புத்தாண்டு என்று சொன்னது பல தமிழ் அறிஞர்கள். கி.ஆ.பெ; மற்றும் பல தமிழ் அறிஞர்கள். பழைய பஞ்சாங்கங்கள் அல்ல! விவாதம் செய்யமுடியவில்லை என்றால் இருக்கவே இருக்கிறார்--நவீன பிராமணர். அவரை இழுத்து விடுவது. வேறு என்ன தெரியும்?

   Delete
 10. இனிய தமிழர் தின வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 11. அன்புடையீர்!
  வணக்கம்!
  இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்

  நட்புடன்/நன்றியுடன்,
  புதுவை வேலு

  ReplyDelete
 12. மனங்கனிந்த பொங்கல் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 13. இனிய பொங்கல் மற்றும் தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள் அய்யா ....!

  ReplyDelete
 14. மதுரைத்தமிழனின் இனிய பொங்கல் தின நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 15. இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள் ஐயா.

  ReplyDelete
 16. பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் ஐயா
  தம +1

  ReplyDelete
 17. வணக்கம்
  ஐயா
  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 18. கவிதை அருமை ஐயா. அனைவர்க்கும் இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல் வாழ்த்துக்கள்! தமிழன் அடிமைதனத்திலிருந்து எப்போது விடுபடுவான் ???

  M.Syed
  Dubai

  ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...