Monday, October 5, 2015

திட்டமிட்டு செயல்படுத்தும் முத்து நிலவன் திறன்மிக்கார் முத்தமிழைக் கற்ற புலவன்!



திட்டமிட்டு செயல்படுத்தும் முத்து நிலவன்
திறன்மிக்கார் முத்தமிழைக் கற்ற புலவன்
இட்டபடி நடவாமல் பலரைக் கலந்தே
இணையவழி வலைதன்னில் அதனைத் தந்தே
பட்டறிவு மிக்கவராய் பணிகள் ஆற்ற
பதிவர்களே பாராட்டி அவரைப் போற்ற
தொட்டபணி தொய்வின்றி நடக்கப் பாரீர்
தோழர்களே திரளாக புதுகை வாரீர்


பம்பரம்போல் அவர்பின்னே இளையோர் நன்றே
பதிவர்களை வரவேற்க படைபோல் நின்றே
அம்மம்மா பணியாற்றும் அழகே போதும்
அவர்வாழ்க! தமிழ்வாழும்! நிகரில் ஏதும்
செம்மொழியாம் நம்மொழிக்கு மகுடம் இதுவே
செப்புவதோ! புதுக்கோட்டை வருதல் அதுவே
நம்மவரே இதுவொன்றே நமக்கு நாமே
நலம்தருமே ! வளம்வருமே! உண்மை ஆமே!

புலவர் சா இராமாநுசம்

29 comments :

  1. அருமை அய்யா...

    அன்புடன் திண்டுக்கல் தனபாலன்

    ReplyDelete
  2. நம் தளத்தில் இணைத்தாகி விட்டது அய்யா... நன்றி...

    இணைப்பு : →பதிவர்களின் பார்வையில் "பதிவர் திருவிழா-2015"

    புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
    அன்புடன் திண்டுக்கல் தனபாலன்

    ReplyDelete
  3. சரியாகச் சொன்னீர்கள்
    தங்கள் பாராட்டு நிச்சயம் அவர்களுக்கு
    அதிகத் தெம்பளிக்கும்
    பகிர்வுக்க் மிக்க நன்றியும் வாழ்த்துக்களும்

    ReplyDelete
  4. உண்மையே. ஒவ்வொரு வார்த்தையும்.

    ReplyDelete
  5. நேற்று நானும் திரு கரந்தை ஜெயக்குமார் அவர்களும் புதுக்கோட்டை சென்றபோது நேரில் கண்டோம். நாங்களும் ஐயாவுடனும், குழுவினருடனும் கலந்துகொண்டோம். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. பாட்டு! நல்லசெயல் நன்றி!

      Delete
  6. பாராட்டப் பட வேண்டிய புதுகைக் குழு. உங்கள் உடல் நலம் தேவலாமா?

    ReplyDelete
  7. மிக நேர்த்தியாக போய்க்கொண்டிருக்கிறது விழாவிற்கான ஏற்பாடு, உங்கள் கவிதையைப் போலவே!
    த ம 5

    ReplyDelete
  8. வசிட்டர் வாயால் பிரம்ம ரிஷி!
    உன்மைதான்;வியக்கும் வகையில் பணியாற்றுகிறார்கள் அவரும் அவர் குழுவும்!
    என்னால்தான் நேரில் காண் இயலாது

    ReplyDelete
  9. அருமை ஐயா தங்களின் வாழ்த்து விழாக்குழுவை ஊக்குவிக்கும்.
    தமிழ் மணம் 7

    ReplyDelete
  10. அனைத்தும் சிறப்பாக நடக்கிறது நமக்குத் தான் குடுப்பினை இல்லை.
    நிஜத்தை கவியில் வடித்து அருமை ! நன்றி !

    ReplyDelete
  11. அருமை ஐயா! விழா சிறப்பாய் நடக்கும்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  12. நம்மவரே இதுவொன்றே நமக்கு நாமே
    நலம்தருமே ! வளம்வருமே! உண்மை ஆமே!

    அருமை
    உண்மை ஐயா
    நன்றி
    தம +1

    ReplyDelete
  13. தமிழ் வலையுலக வரலாற்றில் ஆசிரியர் நா. முத்துநிலவன் – அவர்களுக்கென்று ஒரு தனியிடம் உண்டு. அவரைப் பாராட்டி கவிதை பாடிய புலவர் அய்யாவுக்கு நன்றி. உங்கள் பாராட்டில் நானும் பங்கு கொள்கிறேன்.

    ReplyDelete
  14. செம்மொழியாம் நம்மொழிக்கு மகுடம் இதுவே
    செப்புவதோ! புதுக்கோட்டை வருதல் அதுவே
    தொட்டபணி தொய்வின்றி நடக்கப் பாரீர்
    தோழர்களே திரளாக புதுகை வாரீர்!

    வர இயலாதவர்களையும் வரவழைக்கும் வரிகள் அய்யா!
    என்னையும் தூண்டியது வரச்சொல்லி! என்செய்வேன் என்நிலை எண்ணி வாடி நின்றேன்.
    நன்றி!
    த ம 10

    ReplyDelete
  15. சிறப்பானதோர் பாராட்டு. விழாக் குழுவினருக்கு உற்சாகம் தரும் என்பது திண்ணம்.

    ReplyDelete
  16. அய்யா வணக்கம். தாமதப் பின்னூட்டத்திற்கு மன்னிக்க. நமது விழாப் பணிகள் என்னை விடாப்பணிகளாத் தொடர்வதே காரணம். தங்களை மாநிலத் தலைவராகக் கொண்டிருந்த தமிழாசிரியர் கழகம் உள்ளிட்ட அனைத்து ஆசிரியர் அமைப்புகளின் தலைமையில் தமிழக ஆசிரியர் அரசுஊழியர்கள் லட்சக்கணக்கில் அணிதிரண்டபோது, நான் புதுக்கோட்டை மாவட்டச் செயலராக இருந்தேன். தங்கள் வழிகாட்டுதலை 30ஆண்டுகளுக்கு முன்னரே பெற்று பேறுடையேன். வலையுலகில் தங்கள் முன்னெடுப்பில் சென்னையில் நடந்த பதிவர் சந்திப்பின்போதும் தங்கள் வழிகாட்டுதல் இங்கும் தொடர்வதை அறிந்து நானும் தொடர்ந்தேன். இந்த வயதில் தங்களின் செயல்பாடு, என்போலும் ஏராளமானோரை இணையத் தமிழின்பால் ஈர்ப்பது கண்டு தங்களை வணங்குகிறேன். தங்களின் பாராட்டு எனக்கு இன்னும் சில ஆண்டுகள் இதே வேகத்தில் பணியாற்றக் கிடைத்த ஊட்டபானம் (பேட்டர் சார்ஜ்!) தங்களின் பாராட்டைத் தொடர்ந்து பெறப் பாடுபடுவேன். எனினும் இந்த விழா இங்கிருக்கும் இளைய படையினரின் அர்ப்பணிப்பு விழா. நான் அவர்களுக்கு மூத்தவன் அவ்வளவே. அவர்களின் செயல்வேகம்தான் என்னைச் செயல்பட வைக்கிறது. நீங்கள் விழாவுக்கு வந்து பார்த்து அவர்களைப் பாராட்ட வேண்டும் அய்யா. நன்றி வணக்கம்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் பாராட்டுக்கு என்னை மேலும் தகுதிப்படுத்திக்கொள்ள என்றும் முயன்றுகொண்டே தங்களைத் தொடர்வேன் - நா.முத்துநிலவன், புதுக்கோட்டை.

      Delete
  17. "பம்பரம்போல் அவர்பின்னே இளையோர் நன்றே
    பதிவர்களை வரவேற்க படைபோல் நின்றே
    அம்மம்மா பணியாற்றும் அழகே போதும்
    அவர்வாழ்க! தமிழ்வாழும்!" என்பதில்
    உண்மை உண்டு ஐயா!

    http://www.ypvnpubs.com/

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...