Saturday, May 27, 2017

என் முகநூல் பதிவுகள்

உறவுகளே!
குரங்கு ஆப்பம் பங்கிட்ட
கதைபோல ஆகிவிடும், அண்ணா திமுகா வின், இரண்டு அணிகளின் எதிர் காலம்!

ஆலமரத்தின் விதை ,மிகவும் சிறியதாக இருந்தாலும் முளைத்து மரமாகி தழைத்தால்
பெரிய படையே அதன் நிழல் தங்கி ஓய்வு கொள்ள
முடியும்! ஆனால் பனை மரத்தின் விதை மிகப் பெரியதாக இருந்தாலும் முளைத்து மரமானால் அதன்
நிழலில் ஒருவர் கூட தங்க இயலாது ஆகவே நாம்
ஆலம் விதையாகத் தான் வாழ வேண்டும்!


ச என்ற எழுத்தில் தான்( பெயர் ) ஆரம்ப மாகிறது என்பதால் சந்தணமும் சாக்கடையும் ஒன்று என்றா
சொல்ல முடியும்? அப்படிதான் சில நிகழ்வுகள் நாட்டில் நடப்பதைப் பார்கும் போது எண்ணத் தோன்றுகிறது

கற்றலின் கேட்டல் நன்று,என்று
காது கேட்பவனிடம் ,சொல்வது
பலன் தரும்!! பிறவிச் செவிடனிடம் சொல்வதால்
பலன் உண்டா!

சொல்லுதல் எளிது! யாருக்கு!பிறருக்கு!
செய்வது அரிது! நமக்கு

அனைவருக்கும் நன்றாம் பணிவாக நடத்தல் என்றாலும்
செல்வர்கள் , அவ்வாறு நடந்தால் அதுவே அவர்களுக்கு
மேலுமொரு செல்வமாகும்

நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும்
பெய்யும் மழை என்பர்! ஆனால்
சென்னையில் மட்டும் மழை இல்லையே!
ஏன்? அப்போ!!!!!!!?

புலவர்  சா  இராமாநுசம்

12 comments :

  1. நல்ல தொகுப்புப்பா.

    ReplyDelete
  2. ஓட்டு போட்டுட்டேன்.

    ReplyDelete
  3. அனைத்தும் அருமை ஐயா ..ஆல மரம் ஆழப்பதிந்த கருத்து ..

    ReplyDelete
  4. சென்னையில் ஆயிரக்கணகான
    நல்லவர்கள் இருப்பதால்
    ஒருவேளை ஒருவர் ஒருவராக
    இருக்கும் ஊரில் முதலில்
    பெய்து வரலாம் என மழை நினைத்திருக்கலாம்
    என்வே சென்னை வாசிகள்
    சங்கடப்படவேண்டியதில்லை
    அடுத்த புயல் மழை உங்களுக்குத்தான்

    ReplyDelete
  5. சென்னை வாசிகள் ரொம்ப விவரமானவங்க ,யாரும் உளருவதில்லை ...அதனால் மழை பெய்வதில்லை :)

    ReplyDelete
  6. ஆலமரம் - பனைமரம் உவமை அருமை ஐயா

    ReplyDelete
  7. மிகவும் அருமையான விஷயங்களைப் பொறுமையாகவும் பொருத்தமாகவும் சொல்லியுள்ளீர்கள்.

    //ஆகவே நாம் ஆலம் விதையாகத் தான் வாழ வேண்டும்! //

    நல்லது. யோசிக்க வைக்கும் பகிர்வுக்கு நன்றிகள், ஐயா.

    ReplyDelete
  8. சரியான விசயமாகவே படுது .

    ReplyDelete
  9. அனைத்துமே அருமை.

    ReplyDelete
  10. சிந்திக்க வேண்டிய பகிர்வு

    வாழ்த்துகள் ஐயா வாழ்க நலம்

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...