Showing posts with label அறிவு வள்ளுவர் கருத்துகள். Show all posts
Showing posts with label அறிவு வள்ளுவர் கருத்துகள். Show all posts

Friday, August 4, 2017

உறவே இன்றே உரைப்பது ஒன்றே அறிவெனப் படுவது யாதென அறிந்தே




உறவே இன்றே உரைப்பது ஒன்றே
அறிவெனப் படுவது யாதென அறிந்தே
ஓதிய வள்ளுவன் கருத்தினைத் தெரிந்தே
ஒருசில இங்கே உரைத்திட லானேன்
அழிவினை நீக்கி பகைவரைத் தடுத்தும்
மனதினை அடக்கி எப்பொருள் ஆயினும்
எவரதைச் சொல்லினும் உண்மை உணர்ந்தும்
சான்றோர் நட்பொடு உலகுடன் ஒத்தும்
பின்வரல் உணரந்து அஞ்சுவ அஞ்சியே
நடப்பதே அறிவென நவின்றார் வளுவர்


புலவர் சா இராமாநுசம

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...