வள்ளல் அழகப்பச் செட்டியார் மறைந்த போது வருந்தி
பாடிய இரங்கல் பா
கடையெழு வள்ளல் பெருமை
காதினால் கேட்ட தன்றி
நடைபெறக் காணோம் என்றே
நாடெலாம் பேச நன்றே
இடையொரு வள்ளல் அழகப்பா
இவ்வுலகில் நீயும் தோன்றி
கொடைதரக் கண்டோம் இன்றோ
கொடுத்தீரே உயிரும் நன்றோ!
புலவர் சா இராமாநுசம
குறிப்பு -நினைவில் நின்றவை

