இலண்டன்(-3-8-2013)
காலையில் அனைவரும் தயாராகி முன்னரே வந்துள்ள
பேருந்தில்
ஏறி பயணத்தைத்
தொடங்கினோம் நாங்கள்
பார்க்க வேண்டிய
இடங்களை
( திட்டமிட்ட
வாறு) முதற்கண் சுவாமி நாரயணன் கோவிலிக்குச்
சென்று
இறைவனை வழிபட்டோம் அதன் பின் நகர உலா தொடங்கியது
சற்று
தாமதமாக எங்கள் வழிகாட்டி வர புறப்பட்டோம்
இலண்டன் வீதிகளில் எங்கள் பேருந்து செல்ல ஆங்காங்கே உள்ள
முக்கிய
இடங்களைப் பற்றி வழிகாட்டி குறிப்புகளைக் கூறிக் கொண்டு வரவும் பேருந்தில்
அமர்ந்த வாறே
கேட்டுக் கொண்டே
நகரின் மையப்
பகுதிக்கு
வந்தபோது அடியோடு போக்கு வரத்து தடைபட்டது
காரணம் அன்றைய தினம் இலண்டனில்
சைக்கிள் பேரணி தினமாம்
புற்றீசல்
போல நாலா பக்கமும் இருந்து ஆயிரம் கணக்கில் சைக்கிளில்
வந்தனர்! ஆண், பெண் குழைந்தைகள் என எவ்வித ஆரவாரமும் இன்றி
அமைதியாகச்
சென்றது கண்கொள்ளா காட்சி! என் மனதில் நம் நாட்டில்
நாம்
நடத்தும் ஊர்வலம் பற்றிய காட்சி,மாட்சி நினவுக்கு வந்தது அமைதி
ஊர்வலம்
கூட இங்கு அமைதியாகப் போவதில்லையே!
இதன் காரணமாக பிரிட்டன் பாராளும் மன்றத்தைக கூட வண்டியில்
அமர்ந்தவாறேதான்
பார்க்க முடிந்தது ஒரு வழியாக அழகு மிக்க தேம்ஸ் நதிக் கரையிலே
சென்று இறங்கினோம் அங்கே கண்ட காட்சிகளை பின் வரும் புகைப் படங்கள்
மூலம் அறியலாம் முலில் வருவது நாராயணசுவாமி திருக் கோயில்.
மற்றவை நாளை.......!
புலவர் சா இராமாநுசம்

