Showing posts with label குடி குடியை ஒழிக்கும் மதபோதையை விட மது போதையே கொடியது. Show all posts
Showing posts with label குடி குடியை ஒழிக்கும் மதபோதையை விட மது போதையே கொடியது. Show all posts

Saturday, July 18, 2015

மதுவே மதுவே மயக்கும் மதுவே –இன்று மக்களை அழிக்கும் கூற்றாம் எதுவே!



மதுவே மதுவே மயக்கும் மதுவே –இன்று
மக்களை அழிக்கும் கூற்றாம் எதுவே!
அதுவே அதுவே டாஸ்மாக் அதுவே-ஐயம்
அணுவும் இல்லை உண்மை இதுவே!

குடியை ஒழிக்கும் கொள்கை ஒன்றே-பலரும்
குறிக்கோள் ஆமென சொல்வார் இன்றே!
விடிவே வருமா! தேர்தல் வருதே –மதுவினை
விலக்கிட சட்டம் மீண்டும் தருமா!

வாக்கினை அளிக்க வரிசையில் நின்றும்-பணம்
வழங்கிய கட்சிக்கு அளித்திடச் சென்றும்!
போக்கினை மக்கள மாற்றினால் போதும்-அவரே
புரிந்து தெளியின், போமே ஏதம்!

புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...