Showing posts with label குமரிமாவட்டம் அமைசர் பேச்சு தேவையற்ற ஒன்று கவிதை புனைவு. Show all posts
Showing posts with label குமரிமாவட்டம் அமைசர் பேச்சு தேவையற்ற ஒன்று கவிதை புனைவு. Show all posts

Saturday, September 6, 2014

உளருவாயன் தன்னைவிட ஊமையன் மேலாம்! –என்ற உண்மைதனை உணர்த்தவந்த, உத்தமரே ! போலாம்!




குமரியைக் கேரளாவுடன் சேர்ப்பேன் என்றே-குழம்பி
கூறுகின்றார் பொன்னரவர் அமைச்சர் இன்றே
எமதருமைத் தமிழரிவர் ! என்னே! என்னே !-உலகில்
எங்கேயும் காணாத பிறவி முன்னே!

உளருவாயன் தன்னைவிட ஊமையன் மேலாம்! –என்ற
உண்மைதனை உணர்த்தவந்த, உத்தமரே ! போலாம்!
களறுநிலம் பாடுபட்டும் பயிர்விளைதல் ஆகா !-பிரதமர்
கண்டுவுடன் நீக்காவிடில் தீமையென்றும் போகா!

ஊதுகின்ற சங்கையிங்கே ஊதிவிட்டோம் நாமே-இதை
உணர்ந்து, நடப்பதினி ஆள்வந்தார் தாமே!
சாதுமிரண்டால் காடுகொள்ளா..! பழமொழிதான் அறிவீர்!- தமிழன்
சாதுதான்! மிரண்டுவிட்டால் …?நாடுகொள்ளா..! புரிவீர்!

புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...