Showing posts with label பொங்கல் மகிழ்வு இன்மை கவிதை. Show all posts
Showing posts with label பொங்கல் மகிழ்வு இன்மை கவிதை. Show all posts

Saturday, January 14, 2017

புத்தாண்டு புதுப்பானை பொங்கல் இங்கே-அதில் புத்தரிசி போடுதற்கு வழிதான் எங்கே?



புத்தாண்டு புதுப்பானை பொங்கல் இங்கே-அதில்
புத்தரிசி போடுதற்கு வழிதான் எங்கே
சத்தான நீரின்றி நாடு முழுதும்-பயிர்
சாவியே! உழவன்தன் குடும்பம் அழுதும்
நித்திரை கலையாத அரசுகளே ஆள-அந்த
நிலைகண்டு தாளாத பல்லுயிர் மாள
இத்தரை தன்னில் நாம்காணும் காட்சி-ஏக
இந்தியா என்பதின் மாண்புறு மாட்சி!


புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...