Showing posts with label மக்களவை மாநிலங்களவை கூச்சல் குழப்பம் தடைபடல் \மக்கள் வரிப் பணம் பாழ். Show all posts
Showing posts with label மக்களவை மாநிலங்களவை கூச்சல் குழப்பம் தடைபடல் \மக்கள் வரிப் பணம் பாழ். Show all posts

Saturday, July 25, 2015

நடவாது முடங்கிட நாடாளும் மன்றம்- இப்படி, நடந்திட வழிகாட்டி ! பா .ஜ .கா அன்றும்!



நடவாது முடங்கிட நாடாளும் மன்றம்- இப்படி,
நடந்திட வழிகாட்டி ! பா .ஜ .கா அன்றும்!
கோடான கோடிபணம் வீண்செலவு ஆக –அந்த
கொடுமையே இன்றிங்கே தொடராகிப் போக!
ஓடாகி ஏழைகளே தருகின்ற வரியும்- நாளும்
உதவாது பாழானால் வயிறன்றோ எரியும்!
வாடாது வசதியாய் வாழ்கின்ற இவர்கள்—மக்கள்
வாழ்வோடு விளையாடும் குட்டிச் சுவர்கள் !


கூடியே கலைதற்கா கொடுத்தாராம் ஓட்டே –உள்ளம்
குமுறித்தான் அழுகின்றார் மக்களும் கேட்டே!
தேடியே வந்தீர்கள் தெருவெங்கும் அன்றே –ஏனோ
தினந்தோறும் அவைதன்னில் சண்டையா நன்றே!
நாடியே நல்லதைச் செய்திட வேண்டும் –மேலும்
நாடளும் மன்றத்தை நடத்திட ஈண்டும்!
( மாண்பு மிகு பிரதமர்)
மோடியே முன்னின்று முயன்றிடல் நன்றாம் –நாடு
முன்னேற செய்வதில் முக்கிய ஒன்றாம்!
நடக்குமா???

புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...