Showing posts with label மத்திய அரசு ஆளும் முறை மக்கள் மனம் குறை. Show all posts
Showing posts with label மத்திய அரசு ஆளும் முறை மக்கள் மனம் குறை. Show all posts

Wednesday, March 4, 2015

நடப்பதிலே எதுவுமே தெளிவு , காணோம் – மக்கள் நம்பிக்கைக் குறைகிறது தீர்வு வேணும்!




மாண்புமிகு  பிரதமருக்கு  எதிரி யாக-இங்கே
  மற்றவர்கள்  யாருமில்லை உதிரி யாக
தாண்டவமே  ஆடுவது  அவரின் கட்சி- நாளும்
  தவறாகப்  பேசுவதே அதற்கே  சாட்சி!

முன்னுக்குப் பின்முரணாகக் காரண மின்றி –பலரும்
   முறையற்றுப்  பேசுவதும்  சாரமே யின்றி!
என்னவெனக்  கேட்கின்றார்  நல்லோர் தாமே-பிரதமர்
   ஏற்றாரா? அவரமைதி ! சம்மத மாமே!

கட்சியிலே  கட்டுப்பாடு  அணுவு மில்லை –யார்
  காரணமோ? ஆய்வதிலே பயனு மில்லை!
ஆட்சியிலே அமைச்சருள்ளும் இணைப்பே யில்லை –பிரத
   அமைச்சருக்கு இதனால்  ஆமே தொல்லை!

அடக்குவதே நன்றாகும் பிரதமர் உடனே-நன்கு
    ஆள்வதற்குச்  செய்வதவர்  உரிய  கடனே!
நடப்பதிலே  எதுவுமே  தெளிவு,  காணோம் – மக்கள்
   நம்பிக்கைக்  குறைகிறது  தீர்வு  வேணும்!

புலவர்  சா  இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...