நடக்கட்டும் !முழுயடைப்பு நாளை இங்கே-தமிழ்
நாட்டினிலே ஓரணியாய் உணர்வும் பொங்க !
அடங்கட்டும்! எல்லாமே அசைதல் இன்றி- எங்கும்
ஆலைமுதல் சாலைவரை ஆளே யின்றி!
முடங்கட்டும் முழுதாக போக்கு வரத்து-மக்கள்
முன்வந்து பயணத்தை செய்ய இரத்து!
தொடங்கட்டும் அறப்போரே ! நமதே! வெற்றி
தொடரட்டும் ஒற்றுமையே என்றும் பெற்றி!
புலவர் சா இராமாநுசம்

