Friday, September 30, 2011

எனது ஊரே எதுவெனக் கேட்பீர்


எனது ஊரே எதுவெனக் கேட்பீர்
தனது என்றதன் சிறப்பைச் சொல்ல
பெரிதாய் ஏதும் இல்லா தெனினும்
உரிதாய் ஒன்று உளதாம் அதுவே
இரண்டு ஆறுகள் இடையி்ல் ஊரே
இரண்டு அணைகள் இரட்டணை பேரே
வரண்டே இருக்கும் வந்திடும் வெள்ளம்
மிரண்டே நாங்கள பதறிட உள்ளம்
வந்ததும் விரைவே வடிவதும் விரைவே
சிந்தனை தன்னில் தோன்றிடும் சிறப்பே
செப்பிட இதுதான் என்னுடை விருப்பே
மேலும்
சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல்
செய்யுள் அழகென செப்பிட இலக்கணம்
சிற்றூர் என்றும் செப்பிட இயலா
பேரூர் என்றும் பேசிட இயலா
உயிர்தனைக் காக்க உடலதனைப் பேண
பயிர்தனை வைத்து உணவதைக் கொடுக்க
உழுவித்து உண்ணும் உழவர்கள் பலரும்
செய்யும் தொழிலில் சிறப்பென கருதி
நெய்யும தொழிலை நிகழ்துவர் பலரும்
இன்னார் அன்ன ஏற்றநல் தொழிலும
தன்னேர் இன்றி செய்திட பலரும்
சாதிகள் எனப்பல சாதிகள் இருந்தும்
மோதிடும் சூழ்நிலை இல்லை இன்றும்
சொல்லப் பலவே எல்லை இலவே
சொல்வதில் கூட வேண்டும் அளவே
அதனால்--நான்
இருந்த காலதில் இருந்ததை அங்கே
விரும்பி அதனை விளம்பினேன் இங்கே
ஆனால்--
ஆண்டுகள் பலவும் கழிந்திட பின்பே
வேண்டியே நானும் வழிந்திட அன்பே
சென்றேன் அங்கே செயல்தனை மறந்தே
நின்றேன் நின்றேன் நீண்ட நேரம்
அடடா ஊரே முற்றம் மாற்றம்
அடைந்ததைக் கண்டேன் பழய தோற்றம்
கனவாய ஆகிட கண்டேன் சிலரே
நினவில் வைத்தெனை நலமா என்றார்
ஆடிய இடமெலாம் வீடாய் மாறிட
வாடிய உளத்தொடு வந்தேன் இத்தொடு
பாடலை முடித்தேன் படித்திட நன்றி

புலவர் சா இராமாநுசம்

42 comments :

  1. இனிய காலை வணக்கம் ஐயா,

    ஊரின் சிறப்புக்களை அழகுறச் சொல்லி வந்த கவிதை,
    காலவோட்ட மாற்றத்தில் ஊர் அழகு குன்றி மாறிப் போயிருக்கையில் மனதில் வலி ஏற்பட்டு எண்ணச் சிதறல்களை அடைத்து விடுகிறது எனுன் உண்மையினையும் உரைத்து நிற்கிறது.

    ReplyDelete
  2. இனிய காலை வணக்கம் ஐயா.
    ஆடிய இடமெல்லாம் வீடாய் மாறிட....
    தங்களின் பிறந்த ஊரைப் பற்றி அழகுற கவிதையில் வடித்தீர்.
    பிறந்தவூரின் இன்றைய நிலையில் நிலைகுலைந்தீர்.
    எம்மூரும் அப்படியே. எங்கும் மக்கள் தொகை குறுந்தொகை அல்ல
    பெருன்தொகையானதே!

    நல்ல கவிதை.

    ReplyDelete
  3. அருமை அருமை ஊர் பற்றிய அருமைகளை
    மிக அழகாக தொடர் நிலைச் செய்யுளில் சொல்லி
    இருக்கிறீர்கள் என் நினைக்கிறேன்
    வை.கோ சார் புதுமையாகவும் அழகாகவும்
    சிறுகதைக்கு இடையில் தேவையான குறிப்புகள்
    கொடுத்துப் போதலைப் போல தங்கள்
    கவிதையின் அடிக் குறிப்பாக செய்யுள் குறித்த
    இலக்கண் விளக்கங்களைச் சொல்லிப் போனால்
    பதிவர்கள் அதிகம் பேர் பயனடையக் கூடுமே !
    த.ம 2

    ReplyDelete
  4. இனிய காலை வணக்கம் ஐயா
    நன்றி
    என்னுடைய ஊருக்கு அருகேதான் தங்கள்
    ஊர் என்று கருதுகிறேன்

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  5. இனிய காலை வணக்கம் நிரூ
    என் வலையில் சரிவர இயங்குவதில்லை
    கோகுல் அக்கவுணட் தகராறு( அவ்வப்போது)
    செய்கிறது கருத்துரை போவதில்லை வருவதும்
    இல்லை ஒட்டும் அவ்வாறே பதிவு போவதும்
    வருதும் இல்லை
    இதை யாரேனும் சரிசெய்தால்
    அல்லது உங்களால் முடியுமானால் நன்றி

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  6. நல்ல கவிதை அழகு தமிழில்.. அசத்தல்..

    ReplyDelete
  7. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றிருப்பினும் சொந்த ஊராகுமோ மற்ற ஊர்!!

    ReplyDelete
  8. பழய தோற்றம்
    கனவாய ஆகிட கண்டேன் !

    //
    பல ஊர்களின் நிலை இப்படித்தான் இருக்கிறது ஐயா!

    ReplyDelete
  9. மாற்றங்களின் போதிய மாற்றங்களால்
    உருமாறி போன எத்தனையோ தளங்கள்..
    அழகிய மாற்றங்களால் சோலையாக மாறியது ஒருபுறம்..
    சுகாதாரக்கேடுகளால் குப்பைமேடான சில தளங்கள் மறுபுறம்...
    மாற்றங்கள் பற்றிய அழகுக் கவிதை படைத்தீர்கள் புலவரே.
    நன்று.

    ReplyDelete
  10. அந்த அளவுக்கு நமக்கு ஞானம் இல்லீங்கோ

    ReplyDelete
  11. !* வேடந்தாங்கல் - கருன் *! said.

    நன்றி நண்பரே!

    வருகைக்கும் வாழ்த்துக்கும்

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  12. கோகுல் said.

    நன்றி நண்பரே!

    வருகைக்கும் வாழ்த்துக்கும்

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  13. புலவர் ஐயா,

    மாற்றம் ஒன்றே மாற்றமில்லாதது என்கிறார்கள்.
    ஆனால்,
    பிறந்த ஊரின் தோற்றம் மாற்றம் காணும் போது ஏனோ உள்மனம் தானாய் தன்னை பிசைந்துக்கொள்கிறது.

    உங்கள் ஊரின் இன்றைய நிலைமையை நன்றாய் பகிர்ந்திருக்கிறீகள்.

    ReplyDelete
  14. மகேந்திரன் said...

    நன்றி நண்பரே!

    வருகைக்கும் வாழ்த்துக்கும்

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  15. suryajeeva said

    நன்றி நண்பரே!

    வருகைக்கும் வாழ்த்துக்கும்

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  16. சத்ரியன் said.

    நன்றி நண்பரே!

    வருகைக்கும் வாழ்த்துக்கும்

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  17. ஊரில் புகுந்து விளையாடிய இடங்கள், இப்போ போனால் பாதையே தெரியவில்லை, சிறுவயதில் நாங்கள் பயந்த இடங்கள் இப்போது வீடாக காட்சியளிப்பது ஆச்சர்யமாக இருக்கிறது...!!!

    ReplyDelete
  18. எங்களுக்கும் ஊரை நியாபகப்படுத்திட்டீங்க புலவரே...

    ReplyDelete
  19. MANO நாஞ்சில் மனோ said

    நன்றி நண்பரே!

    வருகைக்கும் வாழ்த்துக்கும்

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  20. MANO நாஞ்சில் மனோ said.

    நன்றி நண்பரே!

    வருகைக்கும் வாழ்த்துக்கும்

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  21. வணக்கம் ஜயா

    நாம் வாழ்ந்த ஊர்களை எப்பொழுதும் நம்மால் மறக்க முடியாது.............

    ReplyDelete
  22. //அடடா ஊரே முற்றம் மாற்றம்
    அடைந்ததைக் கண்டேன் பழய தோற்றம்
    கனவாய ஆகிட கண்டேன் சிலரே
    நினவில் வைத்தெனை நலமா என்றார்
    ஆடிய இடமெலாம் வீடாய் மாறிட
    வாடிய உளத்தொடு வந்தேன்//

    வருத்தம் தான். எல்லா இடத்திலும் எல்லோருக்கும் இன்று இதே நிலை தான், ஐயா.

    உணர்ச்சிப்பிழம்பாய் உள்ளது இந்தக்கவிதை.
    தமிழ்மணம்: 8 vgk

    ReplyDelete
  23. K.s.s.Rajh said...

    நன்றி நண்பரே!

    வருகைக்கும் வாழ்த்துக்கும்

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  24. அழகு கவிதை.
    வாழ்த்துக்கள் ஐயா.

    ReplyDelete
  25. மாற்றத்தை அழகாகாய் பதிவு செய்துள்ளீர்கள் புலவரே..

    அருமை.

    ReplyDelete
  26. கவிதை அருமை அய்யா!

    ReplyDelete
  27. முனைவர்.இரா.குணசீலன் said

    பாரட்டுக்கு நன்றி முனைவரே!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  28. விக்கியுலகம் said

    நன்றி நண்பரே!

    வருகைக்கும் வாழ்த்துக்கும்

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  29. ஊர் மாறியதை அழகிய கவிதையாய் படைத்து இருக்கிறீர்கள் ஐயா.... மாற்றம் தானே என்றுமே மாறாதது....

    ReplyDelete
  30. உலகே மாறிவிட்டது..நம்ம ஊர் எம்மாத்திரம்...புலவரே...
    ஆதங்க கவிதை அருமை...

    ReplyDelete
  31. வணக்கம் ஐயா

    கவிதை வரிகளை படித்து முடித்தவுடன் நான் பிறந்த ஊரின் பழைய நினைவுகளை மீட்டெடுக்க வைக்கின்றது

    இன்று எந்த ஊரில் நாம் இருந்தாலும் சொந்த ஊரின் நினைவலைகள் மனதை விட்டு நீங்காது

    நன்றி நல்லதோர் பகிர்விற்க்கு

    ReplyDelete
  32. Rathnavel said.

    நன்றி !

    வருகைக்கும் வாழ்த்துக்கும்

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  33. வெங்கட் நாகராஜ் said.

    நன்றி நண்பரே!

    வருகைக்கும் வாழ்த்துக்கும்

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  34. ரெவெரி said..

    நன்றி நண்பரே!

    வருகைக்கும் வாழ்த்துக்கும்

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  35. சம்பத்குமார் said.


    நன்றி நண்பரே!

    வருகைக்கும் வாழ்த்துக்கும்

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  36. ஒன்றுமில்லை ஒன்றுமில்லைன்னு ஊரின் சிறப்பை அதன் வளத்தை மிக அழகிய பகிர்வா தந்துட்டீங்க ஐயா....

    அன்பு நன்றிகள் ஐயா பகிர்வுக்கு...

    ReplyDelete
  37. ஊரின் சிறைப்பை கவிதையில் கலக்கலாக பகிர்ந்துள்ளீர்கள்

    ReplyDelete
  38. ஆடிய இடமெலாம் வீடாய் மாறிட
    வாடிய உளத்தொடு வந்தேன் இத்தொடு
    பாடலை முடித்தேன் படித்திட நன்றி /////////

    வணக்கம் ஐயா! இப்போதெல்லாம் கிராமங்கள் முகவரி தொலைத்து நகரங்களாய் மாறி விடன! இதனை அழகுற சொல்லியிருக்கீங்க! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  39. ஊரின் சிறப்பைச் சொன்ன வரிகள் அழகோ அழகு. இரண்டு ஆறுகளுக்கிடையில் ஊர் என்றால் ஆற்றில் வெள்ளம் வந்ததும் பதறிடல் இயல்பே. வந்த வேகத்தில் வெள்ளம் வடியும் அதிசயம் பெரும் அதிசயமே. சாதிச்சண்டையற்ற, உழைப்பாளிகளால் நிறைந்திருந்த அக்காலத்தைக் கண்முன் நிறுத்திவிட்டீர்கள். இறுதியில் ஊரின் தோற்ற மாற்றம் சொல்லி நெஞ்சம் நெகிழச்செய்துவிட்டீர்கள். காலத்தின் அதி தீவிர வளர்ச்சியை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டிய கட்டாயத்தில் நாம்! கவிதையில் சொன்னவிதம் வெகுவாய் ரசிக்கவைக்கிறது. பாராட்டுக்கள் ஐயா.

    ReplyDelete
  40. சூப்பர் கவிதை புலவரே

    ReplyDelete
  41. அடடா ஊரே முற்றம் மாற்றம்
    அடைந்ததைக் கண்டேன் பழய தோற்றம் /

    ஊரின் மாற்றம் அழகிய கவிதை..
    ஐயா உங்களின் கவிதைக்கே தனிச்சிறப்பு இருக்கு..
    அன்புடன் பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  42. முதியோர் தின சிறப்பு இடுகையைக் காணத் தங்களை அன்புடன் அழைக்கிறேன் புலவரே..

    http://gunathamizh.blogspot.com/2011/10/blog-post.html

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...