Friday, October 7, 2011

வேங்கட உன்னடி தொழுகின்றேன்

    குறிப்பு- புரட்டாசி மூன்றாம் சன‍க்கிழமை
                      பாமாலை!

    ஆதவன் எழவான் அதிகாலை
      ஆயர் பாடியில்  அதுவேளை
    மாதவன்  குழலை  ஊதிடுவான்
      மாடுகள்  அனைத்தும்   கூடிடவே
    ஒன்றாய்   கூடிய   ஆவினங்கள்
      ஊதிய  குழலின்  இசைகேட்டு
    நன்றாய்  மயங்கி  நின்றனவே
      நடந்து மெதுவாய் சென்றனவே
 
   ஆயர்  பாடியில் மங்கையரும்
     ஆடவர்  பிள்ளைகள் அனைவருமே
   மாயவன் இசையில் மயங்கினரே
     மகிழ்வுடன் பணியில் இயங்கினரே
   சேயவன்   செய்த  குறும்புகளே
     செப்பிட இனிக்கும் கரும்புகளே
   தூயவன்  திருமலை வேங்கடவா
     திருவடி தலைமேல்  தாங்கிடவா

   ஆயிரம் ஆயிரம்  பக்தர்தினம்
      ஆடிப் பாடி வருகின்றார்
   பாயிரம்  பலபல பாடுகின்றார்
      பரமா நின்னருள்  தேடுகின்றார்
   கோயிலைச்  சுற்றி  வருகின்றார்
     கோபுர தரிசனம் பெறுகின்றார்
   வாயிலில் உள்ளே நுழைகின்றார்
     வரிசையில் நின்றிட விழைகின்றார்
 
    எண்ணில் மக்கள் நாள்தோறும்
     ஏழாம் மலைகள் படியேறும்
   கண்ணுக் கெட்டிய தூரம்வரை
     கண்ணன் புகழே போற்றுமுரை
   பண்ணொடு இசைத்தே உய்கின்றார்
     பஜகோ விந்தமே செய்கின்றார்
   விண்ணொடு மண்ணை அளந்தவனே
     வேங்கட உன்னடி தொழுகின்றேன்
        
              புலவர் சா இராமாநுசம்
     

24 comments :

  1. ஐயா,
    கவிதை அருமை;
    எங்களோடு பகிர்ந்துகொண்டமைக்கு
    மிக்க நன்றி;

    ReplyDelete
  2. புரட்டாசி மூன்றாம் சனி‍க்கிழமை பாமாலை பாடல் அருமை ஐயா...

    ReplyDelete
  3. சனி சன என்றுள்ளது...

    புலவரை திருத்தியதில் பெருமகிழ்ச்சி...-:)

    ஒரு வேளை நான் தான் தவறோ...?

    Please delete this after reading.

    ReplyDelete
  4. விண்ணோடு மண்ணை அளந்தவரை
    உங்கள் அழகுகவியால்
    கவர்ந்திழுத்து உள்ளீர்கள்!

    ReplyDelete
  5. ViswanathV said.

    அன்பரே!
    தங்கள் முதல் வருகைக்கும்
    வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  6. ரெவெரி said

    வருகைக்கும்
    வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  7. ரெவெரி said

    உண்மை தான் சகோ!
    கவனக் குறைவால் ஏற்பட்ட பிழை
    அவசரம் மின் தடை!

    சுட்டியதற்கு நன்றி
    நான் தவறாக எடுத்துக் கொள்வேனோ
    என்று கவலை வேண்டாம்

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  8. கோகுல் said


    அன்பரே!
    தங்கள் வருகைக்கும்
    வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  9. கண்ணன் புகழே போற்றுமுரை
    பண்ணொடு இசைத்தே உய்கின்றார்
    பஜகோ விந்தமே செய்கின்றார்
    விண்ணொடு மண்ணை அளந்தவனே
    வேங்கட உன்னடி தொழுகின்றேன்/

    மாலவனுக்குச் சூட்டிய அற்புத
    பாமாலைக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  10. வேங்கடவன் பாமாலை அருமை ஐயா

    தமிழ் மணம் நாலு

    ReplyDelete
  11. இராஜராஜேஸ்வரி said.

    எடுத்துக்காட்டி எழுதினீர் கருத்துரை அந்த
    ஏழுமலையான் அருள் தங்களுக்குக் கிடைக்க வாழ்த்துகிறேன்
    நன்றி!


    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  12. M.R said.


    அன்பரே!
    தங்கள் வருகைக்கும்
    வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  13. அருமை ஜயா பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி

    ReplyDelete
  14. கோ
    விந்தன்

    -புகழ் சிறப்பாக இருக்கிறது அய்யா.

    சந்தம் அருமையோ அருமை.

    ReplyDelete
  15. புரட்டாசி சனியில் வேங்கடவன் புகழ்பாடும் சிறப்பான கவிதை. அந்த வேங்கடவன் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.....

    ReplyDelete
  16. வேங்கடம் நின்ற மாலவனை
    விண்ணவர் போற்றும் மாலவனை
    ஓங்குதழிழ் தனில் புகழ்பாடி
    உணரச்செய்தீர் அவன்பெருமை
    யாங்கணும் அவனருள் பெருகிடவும்
    யாவரும் பயனுற வாழ்ந்திடவும்
    தீங்கற திருமால் அருள்வேண்டும்
    தெள்ளிய கவிதை உரைத்தீரே!

    ReplyDelete
  17. அண்ணே கவிதை அருமை..பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  18. K.s.s.Rajh said

    அன்பரே!
    தங்கள் வருகைக்கும்
    வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  19. சத்ரியன் said.

    புகழ் சிறப்பாக இருக்கிறது அய்யா.

    சந்தம் அருமையோ அருமை.

    நன்றி மகனே!
    பேத்தி நலமா

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  20. சேட்டைக்காரன் said

    ஆகா!
    வேங்கடவன் அருளாலால் நீங்கள்
    எனகொரு நல்ல கவிதை அளித்தீர்
    நன்றி! நண்ப! தன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  21. விக்கியுலகம் said

    அன்பரே!
    தங்கள் வருகைக்கும்
    வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  22. பாமாலை சூட்டித் தொழுது விட்டீர்கள்.
    நன்று!

    ReplyDelete
  23. வேங்கட பாமாலை ....சூட்டி வணங்கிவிட்டீர்கள்... நன்றி

    ReplyDelete
  24. '''...விண்ணொடு மண்ணை அளந்தவனே
    வேங்கட உன்னடி தொழுகின்றேன்...''
    நல்லது ஐயா. தொழில்நுட்புக் கோளாறால் கருத்திட முடியவில்லை .இப்போது ஒரு வழி கண்டுள்ளேன்.வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.
    http://www. kovaikkavi.wordpress.com

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...