Monday, September 12, 2016

அணிவகுத்து அனைவருமே ஒன்று படுவோம்-ஈகோ அரசியலை விடுவீரே! இன்றேல் கெடுவோம்!


இனிமேலும் காவிரிநீர் வருமா மென்றே –நாம்
எதிர்பார்த்தால் ஏமாந்து போவோம் நன்றே
கனியேது காயின்றி அறிதல் இன்றே –சற்றும்
கனியாது கன்னடரின் உள்ளம் ஒன்றே
பணியாது நீதிக்கும் அறிந்து கொள்வோம் –காவிரி
பயிர்காக்க மாற்றுவழி கண்டால் வெல்வோம்
அணிவகுத்து அனைவருமே ஒன்று படுவோம்-ஈகோ
அரசியலை விடுவீரே! இன்றேல் கெடுவோம்!


புலவர் சா இராமாநுசம்

7 comments :

  1. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதை சொல்லவும் வேண்டுமோ :)

    ReplyDelete
  2. மாற்று வழி ஒன்றை அவசரமாக யோசிக்க வேண்டிய நேரம்!

    ReplyDelete
  3. பகுதி நேரத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி?

    இன்று இருக்கும் கால கட்டத்தில் வீட்டில் இரண்டு பெரும் வேளைக்கு போனால் கூட குடும்ப செலவு சமாளிக்க முடியவில்லை .அப்படி இருக்கும் பொழுது மேற்கொண்டு எப்படி சம்பாதிப்பது என்று பலரும் தேடி அலைந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

    சரி வீட்டில் கம்ப்யூட்டர் இருக்கிறது இன்டர்நெட் காங்நேச்டின் இருக்கிறது ஆன்லைன் வேலை செய்து மாதம் ஒரு 2000 சம்பாதித்தால் கூட வாடகை கட்டிவிடலாம் என்று எண்ணி நிறைய பேர் ஆன்லைன் வேலை தேடி ஏமாந்து கடைசியாக இந்த ஆன்லைன் வேலை என்றாலே ஏமாற்று என்று நினைப்பவர்கள் மத்தியில் .எங்களிடம் உள்ள நண்பர்கள் எப்படி ஆன்லைன் மூலமாக பணம் எடுக்கிறார்கள் .சரியான வழிமுறைகள் இருந்தால் கண்டிப்பாக ஆன்லைன் மூலமாக பணம் சம்பாதிக்க முடியும் என்பதற்கு நாங்கள் ஒரு முன் உதாரணம் .இங்கு ஏமாறுவதற்கு வாய்ப்பு இல்லை ஏமாற்ற எங்களுக்கு மனதும் இல்லை .நானும் உங்களை போன்று ஆன்லைன் வேலைகளை தேடி தேடி அலைந்தவனில் நானும் ஒருவன் இப்பொழுது .நான் அனைவருக்கும் வேலை கொடுக்கும் அளவுக்குஉள்ளேன். நீங்கள் வேலை செய்தால் கண்டிப்பாக பணம் பெற முடியும் .நீங்கள் வேலை செய்யும் பணம் உங்களது ஆன்லைன் பேங்க் அக்கௌன்ட் இல் தான் உங்களது பணம் இருக்கும் .
    அதனால் எந்த பயமும் தேவை இல்லை நீங்கள் உழைக்கும் பணம் எங்களுக்கு தேவை இல்லை .உங்கள் உழைப்பு வீண் போகாது. எங்களது நேரமும் நாங்கள் வீணாக விரும்பவில்லை .தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளலாம் பயன் பெறலாம்.
    நன்றி வாழ்க வளர்க
    மேலும் விவரங்களுக்கு

    Our Office Address
    Data In
    No.28,Ullavan Complex,
    Kulakarai Street,
    Namakkal.
    M.PraveenKumar MCA,
    Managing Director.
    Mobile : +91 9942673938
    Email : mpraveenkumarjobsforall@gmail.com
    Our Websites:
    amazontamil
    amazontamil

    ReplyDelete
  4. அரசியல் ஆக்காமல் சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும்... செய்வார்களா என்பது தான் சந்தேகம்.

    ReplyDelete
  5. அனைத்தையும் அரசியலாக்கி வாழ்வாதாரத்திற்கு தர வேண்டிய முக்கியத்துவத்தினை உணர்வதில்லை ஐயா.

    ReplyDelete
  6. நடப்புக்கேற்ற கவிதை.
    த ம 4

    ReplyDelete
  7. வணக்கம் புலவர் ஐயா !

    இரப்போர்க்கும் இல்லையெனாச் சமூகம் இங்கே
    .....இடர்பட்டு நிற்பதனைக் கண்டும் ! ஆட்சித்
    தரப்பினரும் மௌநிக்கத் தமிழன் வாழ்வில்
    .....தண்ணீராய்க் குருதிவழிந் தோடும் ! இன்னும்
    அரக்ககுணம் கொண்டவர்கள் அமைதி காத்தால்
    .....அழிகின்ற பொருளுயிர்கள் வருமோ மீண்டும்
    வரப்போகும் அழிவெல்லாம் ஏழை மக்கள்
    ......வயிறெரித்துப் போவதுதான் மீதம் ஆகும் !

    காலத்திற்கு ஏற்ற கவிதை கண்டுகொள்வார்களா ஐயா !

    தம +1

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...