நடக்கிறதா அரசுயென
தெரிய வில்லை-நாட்டில்
நடப்பதென்ன
ஒன்றுமே புரிய வில்லை!
முடங்கியதோ
செயல் படுதல் என்றே-குழப்பம்
மனமுழுதும் தோன்றிவிட ஏனோ! ஒன்றே
படச்சுருளாய்
ஒடுதய்யா எண்ணத் திரையில்-நின்று
பாழுமனம் தேடுதய்யா அந்தோ குறையில்
வடக்கிருந்து வருகிறதே
ஊதக் காற்றும்-ஏதும்
வாய்திறவா தமிழரசே உண்மை சாற்றும்
புலவர்
சா இராமாநுசம்
அருமை
ReplyDeleteநன்றி!
Deleteஅவரவர் தனது நாற்காலியை காப்பாற்றுவதே பெரும்பாடாக இருக்கிறதே ஐயா பாவம் அவர்களும் என்னதான் செய்வார்கள் ?
ReplyDeleteநன்றி!
Deleteகுழப்பமே வேண்டாம் ஐயா... முடங்கியே விட்டது...!
ReplyDeleteநன்றி!
Deleteதூங்கும் அரசு.
ReplyDeleteநன்றி!
Deleteநம்மை அடிமைகள் ஆண்டுகொண்டிருக்கிறார்கள்!
ReplyDeleteவடக்கே இருந்து வரும் ஊதக்காற்றில் அரசே டித்துக் கொண்டு போகப்படும்
ReplyDeleteஊதக் காற்றை இவர்களால் நீண்ட நாளைக்கு தாக்கு பிடிக்க முடியாதே :)
ReplyDeleteஅருமை.
ReplyDeleteஅழகு தமிழில் கவிதைகள், கதைகள், கட்டுரைகள், ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் தமிழ் சார்ந்த படைப்புகள் என உங்கள் திறமைகளுக்குக் களம் அமைக்க நாம் தயாராக உள்ளோம். இலக்கியம், விஞ்ஞானம், அரசியல், கணிதம் மற்றும் பொருளியல் என எது சார்ந்த படைப்புகளாக இருந்தாலும் சிகரம் இணையத்தளத்துக்கு அனுப்பி வையுங்கள். தமிழால் இணைவோம்! தமிழை வளர்ப்போம்!
ReplyDeleteதேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்!
சிகரம் இணையத்தளம் : https://www.sigaram.co
தொடர்புகளுக்கு : editor@sigaram.co
அரசு செயல்படுவதாகத் தெரியவில்லை. நல்ல மாற்றம் வேண்டும். என்று வருமோ.
ReplyDeleteவடக்கிருந்து வரும் ஊதக்காற்றே
ReplyDeleteபதவிப் போதையில் இருப்போருக்கு
தென்றலாய் சுகம் தருது
நாம் வருந்தி என்ன செய்ய ?