Saturday, September 9, 2017

ஓட்டுப்பட்டைக் காணவில்லை தமிழ்மணமே-ஏனோ உண்மையென்ன புரியவில்லை தமிழ்மணமே!





ஓட்டுப்பட்டைக்  காணவில்லை  தமிழ்மணமே-ஏனோ
  உண்மையென்ன புரியவில்லை தமிழ்மணமே
காட்டுகின்றாய் பட்டியலை தமிழ்மணமே-நேற்று
   காட்டியதே  மாறாமல்  தமிழ்மணமே
வாட்டுகின்றாய் எதற்காக தமிழ்மணமே-நாங்கள்
   வருந்துவதை அறிவாயா தமிழ்மணமே
மீட்டுவிடு முறைப்படியே தமிழ்மணமே-நீயும்
   மீண்டும்வர வேண்டுகிறேன் தமிழ்மணமே

புலவர்  சா  இராமாநுசம்

13 comments :

  1. இரண்டு நாட்களாகவே வேலை செய்யவில்லை. என்ன காரணம் என்றும் புரியவில்லை....

    விரைவில் சரியாகும் என்ற நம்பிக்கையோடு...

    ReplyDelete
  2. தமிழ் மணம் விரைவில் வரும் என நம்புவோம்.

    ReplyDelete
  3. ஏனோ தெரியவில்லை. ஓட்டுப்பட்டை பலருடைய பதிவுகளில் தெரிவதில்லை ஐயா!

    ReplyDelete
  4. யாரோ ஹேக் செய்து விட்டார்கள் போல...

    ReplyDelete
  5. நான் நினைக்கிறேன் தமிழ்மணத்தில் புனரமைப்பு நடக்கிறது.. இனிப் புதுப்பொலிவோடு வரும் என எதிர்பார்க்கிறேன்:).. அதில் புது மாற்றங்களையும் எதிர்பார்க்கிறேன்:).. அதாவது வோட்ஸ் அடிப்படையில் மட்டுமல்லாது.. கொமெண்ட்ஸ் அடிப்படையையும் கணக்கெடுத்துத்தான்.. மகுடம் சூட்டப்படுமாம்ம்:).. ஹா ஹா ஹா அப்பூடியெனில்.. நேரமில்லை என யாரும் சொல்ல மாட்டினம்.. ஓடி ஓடிக் கொமெண்ட்ஸ் க்கு எல்லாம் பதில் போடுவினம்:)..

    ஆனா ஒன்று சிலர்.. இப்போ 4,5 கொமெண்ட்ஸ் போடுவோர்.. போட்டியில் ஒரு கொமெண்ட் மட்டுமே போடுவினம்.. ஹா ஹா ஹா எப்பூடி என் கற்பனை:).

    ReplyDelete
    Replies
    1. நல்ல கப்பனை.......அவ்வ்வ்வவ்வ்வ்.....

      ஆடையில் நெய்யுண் டென்றே
      ...அறிந்திடாப் பாலைப் போல
      மேடையில் நானும் வந்து
      ....மெச்சிய கவிக ளுக்குள்
      வாடையில் விஞ்சும் உங்கள்
      ....மனங்கவர் பதிவு எல்லாம்
      கூடையில் சுமக்கும் பூவில்
      ....கொட்டிய தேன்போ லாகும் !

      Delete
  6. வணக்கம் ஐயா !


    அமிழ்தமாய்க் கவிகள் தந்து
    அணைத்திடும் எங்கள் ஐயா
    தமிழ்மணப் பட்டை தேடித்
    தவிக்கிறார் வந்து பாரும்

    முன்னறி வித்தல் இன்றி
    முடக்கிய பட்டை தன்னை
    உன்னறி வித்த லாலே
    ஒளிர்ந்திட வேண்டும் நாளை !

    அருமை ஐயா வாழ்க நலம்

    ReplyDelete
  7. தமிழ் மணம் மறைந்து போய்விட்டது ஐயா
    புதுப்பொலிவோடு மீண்டு வரும் என எதிர்பார்ப்போம்

    ReplyDelete
  8. தமிழ் மண செயல்படாதது மிகுந்த வேதனையைத் தருகிறது!நம்மைப் போன்ற பதிவர்களுக்கு வேடங்தாங்கலே தமிழ் மணம்தானே அய்யா :)

    ReplyDelete
  9. ஓட்டுப்பட்டை வந்துவிட்டது. ஓட்டு போட்டுவிட்டேன் ஐயா.

    ReplyDelete
  10. அண்மை காலமாகவே தமிழ்மணத்தில் பிரச்சினைகள். ஓட்டுப் பட்டையில் மட்டுமல்ல,புதிய பதிவை இணைப்பதிலும்தான்.

    ReplyDelete
  11. தமிழ்மணம் இப்போது சேடம் இழுக்கும் நிலையில் தான் இருக்கின்றது! புதுப்பொழிவு என்று காணுமோ?

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...