Showing posts with label அரசு மட்டுமல்ல மக்கள் அனைவருமே உதவ வேண்டும். Show all posts
Showing posts with label அரசு மட்டுமல்ல மக்கள் அனைவருமே உதவ வேண்டும். Show all posts

Tuesday, February 23, 2016

மாற்றுத் திறனாளிகளுக்காக மனம் வருந்தி எழுதிய கவிதை!




மாற்றுத் திறனாளிகளுக்காக, மனம் வருந்தி எழுதிய கவிதை!

கண்ணில்லார் வாழ்வதே மிகவும் அரிது –கற்ற
கல்வியிலே பட்டமவர் பெற்றல் பெரிது!
எண்ணிலார் அவ்வகையர் வேலைக் கேட்டும்-இன்று
வீதிக்கு வந்தபின்பும் அந்தோ வாட்டும்!
பண்பில்லா அரசாக இருக்க லாமா-என்ன
பாவமவர் செய்தார்கள்! துயரம் போமா!
கண்ணில்லார் அவரா ! நாமே ஆகும் –கேட்கும்
காதில்லார் அரசென்றால் ? துயரா? போகும்!


புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...