உச்சநீதி மன்றம்வரை சென்றப் பின்பும்- எண்ணில்
உயிர்துறந்த உழவர்தமை மறைத்தல் துன்பம்
அச்மின்றி பொய்கூறிய தமிழக அரசே-இனியும்
ஆள்வதெனில் என்றென்றும் அழியா மாசே
பிச்சைதனை போடுவதாய் நடுவண் அரசும்-ஏதோ
பேருக்கு உதவியென தருவது பெரிசாம்
மெச்சவொரு ஆட்சிவரும் நாள்தான் என்றோ-உழவன்
மேதினியல் மேன்மைகெட அழிதல் நன்றோ!?
புலவர் சா இராமாநுசம்

