Showing posts with label ஊடகங்கள் சமூகம் ஊழல் உண்மைநிலை உரைக்க இயலாத அவலம். Show all posts
Showing posts with label ஊடகங்கள் சமூகம் ஊழல் உண்மைநிலை உரைக்க இயலாத அவலம். Show all posts

Wednesday, June 24, 2015

அதுஊழல் அல்லவென எடுத்துக் கூறும்-ஊடக அவலங்கள் ஐயகோ என்று மாறும்!



எதுஊழல் எனஅறியார் மக்கள் என்றே- ஏனோ
எண்ணுவதோ ? எவர்வரினும் ஆள இன்றே!
இதுஊழல் என்றிடுவர் ஆட்சிக் கட்டில்-அவர்
ஏறிவிட்டால் மறுப்பாரே அதனை ஏட்டில்!
புதுஊழல் துறைதோறும் நாளும் தோன்றும்-உரிய
போக்குதனை கூறுகின்ற எந்த சான்றும்!
அதுஊழல் அல்லவென எடுத்துக் கூறும்-ஊடக
அவலங்கள் ஐயகோ என்று மாறும்!


புலவர் சா இராமாநுசம்

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...