முயன்றாலே
முடியாதன ஏதுமில்லை-நம்மை
முன்னேற்ற முயல்வதிலே தீதுமில்லை
உயர்ந்தோங்கி
வளர்கின்ற மரமேபோன்றே-எவரும்
உள்ளத்தில் பெறுமுறுதி வரமாத்தோன்ற
வியந்தேதான்
காண்போரும் எண்ணவேண்டும்-ஆய்ந்து
வினையாற்றி வழிகாணில் வெற்றியாண்டும்
பயனாற்றும்
வாழும்வகை நாளும் காட்டும்-நன்கு
பண்பட்ட மனிதரென புகழும் சூட்டும்
புலவர் சா இராமாநுசம்

