ஆறுதலை
அளித்திட்ட அனைவருக்கும் நன்றிதனை
கூறுகின்றேன்
சரியென்று குவித்தகரத்
தோடதனை
பேறுபெற
பெருமைமிக பிறவியிலே முடிந்தவரை
ஊறுபெற
எவரையுமே உரைத்தில்லை கடிந்தவரை
என்றே வாழ்ந்திட்டேன் எண்ணத்தில் இறக்கும்வரை
நன்றே
வரைந்திடுவேன் நற்றமிழில் சிறக்கவுரை
கற்றேன் இயன்றவரை காணவில்லை எல்லைதனை
உற்றேன்!
உவகைதன்னை உறவுகளே வணங்குகிறேன்!
புலவர் சா இராமாநுசம்

